For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெலுங்கானாவுக்கு ஒய்.எஸ்.ஆர், தெலுங்குதேசம் ஆதரவு- கடிதங்களை ரிலீஸ் செய்தார் திக்விஜய்!!

By Mathi
Google Oneindia Tamil News

Digvijaya releases letters of TDP, YSR Congress favouring Telangana
டெல்லி: தெலுங்கானாவுக்கு ஆதரவு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் கட்சிகளின் சார்பில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதங்களை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் திக்விஜய்சிங் இன்று வெளியிட்டுள்ளார். அத்துடன் சீமாந்திரா மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 70 நாட்களுக்கு மேலாக கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமாவை உள்ளடக்கிய சீமாந்திராவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களாக உச்சகட்டமாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலரும், ஆந்திர மாநில பொறுப்பாளருமான திக்விஜய்சிங் இன்று வெளியிட்ட அறிக்கையில், சீமாந்திராவில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து மிகுந்த கவலை கொள்கிறோம்.

தெலுங்கானாவில் வாழ்கிற, பணியில் இருக்கிற சீமாந்திரா மக்கள் மரியாதையுடனும் பாதுகாகாப்புடனும் வாழ்வதற்கும் நதிநீர், மின்சார பகிர்வு பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் உரிய நடவடிக்கை எடுப்போம் என்று காங்கிரஸ் கட்சி உறுதி அளிக்கிறது.

மத்திய அரசு அமைத்திருக்கும் அமைச்சர்கள் குழு இது குறித்து ஆலோசனை நடத்தும். சீமாந்திரா மக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். பிரச்சனைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு சீமாந்திரா மக்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் தெலுங்கானா தொடர்பாக மத்திய அரசு, ஜனாதிபதிக்கு தெலுங்குதேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதங்களையும் திக்விஜய்சிங் வெளியிட்டுள்ளார்.

English summary
Congress General Secretary Digvijaya Singh on Tuesday released letters by the Telugu Desam Party and the YSR Congress in favour of a separate state of Telangana. In a statement, Digvijaya expressed concern over the protests in Seemandhra, assuring that the concerns will be met.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X