For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக முடக்க தினகரன் தரப்பு வலியுறுத்தல்

இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக முடக்க வேண்டும் என தினகரன் தரப்பு தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தியுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக முடக்கி வைக்க வேண்டும் என தினகரன் தரப்பு தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. தற்போது அதிமுகவின் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்துள்ளன.

Dinakaran faction seeks EC to freeze two leave symbol permanently

அதேநேரத்தில் தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். தினகரன் தரப்பும் தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலையை கோரியிருந்தது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இன்றைய விசாரணையின் போது தினகரன் அணி சார்பாக முன்னாள் சட்ட அமைச்சர் அஸ்வினிகுமார் ஆஜராகி வாதாடினார். அவர் தமது வாதத்தின் போது, ஓபிஎஸ் தரப்பு போலி கையெழுத்துடன் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்திருக்கிறது. ஆகையால் ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை தரக்கூடாது.

இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாகவே முடக்க வேண்டும் என வாதிட்டார். தினகரன் தரப்பின் இந்த வாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக முடக்க வேண்டும் என்கிற தினகரன் தரப்பின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

அத்துடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு தங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் எனவும் வாதிட்டது. இவர்கள் தரப்பில் வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராகி வாதிட்டார்.

English summary
AIADMK Dinakaran faction seeks the Election Commission to freeze two leave symbol permanently.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X