குத்து ரம்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன குடியரசுத் தலைவர்!

'குத்து', 'பொல்லாதவன்' மற்றும் 'வாரணம் ஆயிரம்' போன்ற படங்களில் நடித்தவர் ரம்யா என்கிற திவ்யா ஸ்பாந்தனா.
கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார். தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களிலேயே மிக இளையவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி.யான ரம்யா இன்று தனது 31ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
இத்தனை ஆண்டுகள் ஒரு நடிகையாகத் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடிய இவர் இன்று முதன் முதலாக மாண்டியா தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக பிறந்தநாள் கொண்டாடினார். அவருக்கு திரைத்துறையினர் மட்டுமல்லாது, அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் திவ்யா எம்பிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதனை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள ரம்யா, அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து விஷயங்களிலும் உங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கும் அன்பும், ஆதரவுமே என்னைச் செயல்படத் தூண்டுகின்றது என்றும் அவர் பதில் தெரிவித்துள்ளார்.
அரசியலில் தற்போது ரம்யா தீவிரமாக இறங்கியுள்ளபோதிலும், தான் ஒப்புக்கொண்ட படங்களை முடித்துத் தருவதிலும் உறுதி காட்டுவது திரையுலகினரை சந்தோஷப்பட வைத்துள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, தமிழர் பகுதிகளில் தமிழில் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டதன் மூலம் தமிழரிடமும் நல்ல பெயரைப் பெற்றுள்ளார் திவ்யா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications