கிரேஹாம் பெல்தான் போன் கண்டுபிடிச்சது.. அதை யூஸ் பண்ணுங்க.. டிஜிட்டல் இந்தியாவை கலாய்த்த நீதிபதிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  டிஜிட்டல் இந்தியாவை கலாய்த்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்- வீடியோ

  டெல்லி: இந்தியாவில் தற்போது டிஜிட்டலைசேஷன் நடந்து கொண்டு இருக்கிறது. எப்போதும் போல் இல்லாமல் இப்போதுதான் டிஜிட்டல் இந்தியா கோஷம் ஓங்கி ஒலிக்கிறது.

  ஆனாலும் இன்னும் அரசு அலுவலங்களில் மெயிலுக்கு பதில் போஸ்ட்தான் அனுப்பப்பட்டு வருகிறது. போன் காலுக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது .

  இதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் வெவ்வேறு வழக்குகளில் கடந்த இரண்டு நாட்களில் கிண்டல் செய்து இருக்கிறார்கள். இதுதான் உங்கள் டிஜிட்டலைசேஷனா என்று கேட்டுள்ளார்கள்.

   கால அவகாசம்

  கால அவகாசம்

  உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்காக ஜார்கண்ட் சார்பாக வழக்கறிஞர் தாபேஷ் குமார் சிங் வாதாடினார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்ட சில முக்கிய விவரங்கள் அவரிடம் இல்லை என்பதால் அரசிடம் கேட்டு இரண்டு வாரம் கழித்து கொடுக்கிறேன் என்று கூறினார். நீதிபதிகள் செல்லமேஸ்வரர், சஞ்சய் கே கே கவுல் இதற்கு அனுமதி அளித்தார்கள்.

  எவ்வளவு

  எவ்வளவு

  ஆனால் அவர் இரண்டு வாரம் கழித்து நேற்றும் தகவல்களை சமர்ப்பிக்கவில்லை. மேலும் மாநில அரசு அலுவலகம் சென்று பேச நேரம் ஆகும் என்றும் கூறினார். இதைக் கேட்ட நீதிபதிகள் இன்னும் எவ்வளவு அவகாசம் வேண்டும். 5 வருடம் போதுமா என்றார். உடனே மற்றொரு நீதிபதி இல்லை ஐந்து வருடம் போதாது 10 வருடம் கொடுக்கலாம் என்று கிண்டல் செய்தார்.

  போன்

  போன்

  அதோடு இல்லாமல் ''19ம் நூற்றாண்டில் கிரேஹாம் பெல் என்பவர் வாழ்ந்தார். அவர் தொலைபேசி என்ற ஒன்றை கண்டுபிடித்தார். நாம் இப்போது அதைப் பயன்படுத்துகிறோம். அதை வைத்து நீங்கள் அரசு அதிகாரிகளிடம் பேசி தகவலை பெறலாமே'' என்று கிண்டலாக கேட்டார்கள்.

   மெயில் இருக்கு

  மெயில் இருக்கு

  இதேபோல் இரண்டு நாள் முன்பு ஒரு வழக்கில் மத்திய அரசு நீதிமன்றத்திடம் சரியான ஆவணங்கள் கொடுக்கவில்லை என்று நீதிபதிகள் மதன் லோகர், தீபக் குப்தா ஆகியோர் கோபப்பட்டனர். அப்போது ''இப்படி ஆவணங்களை ஏன் எப்போது போஸ்டில் அனுப்புகிறீர்கள். எல்லாம் டிஜிட்டலை மயம் என்று சொல்கிறீர்கள், ஏன் மெயில் அனுப்பத் தெரியாதா?'' என்று கேட்டு இருக்கிறார்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Supreme court judges asked Government lawyers that ''Do you know a instrument called Telephone invented by Graham Bell, use it!''. They have got anger after not getting instant information on any issue and later uttered this comment.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற