For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் இன்றைய சூரிய கிரகணம் தெரியுமா? எப்போது தொடங்குகிறது?

By BBC News தமிழ்
|

ஏப்ரல் 30ம் தேதி தோன்றும் குறை சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியுமா என்று பார்ப்போம்.

இது குறித்து கல்கத்தாவில் உள்ள விண்வெளி இயற்பியலாளரும், எம்.பி. பிர்லா பிளானடோரியத்தின் முன்னாள் இயக்குநருமான தேவிபிரசாத் துரை பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியது.

"ஏப்ரல் 30ம் தேதி தோன்று குறை சூரிய கிரகணம் தென் அமெரிக்க கண்டத்தின் தென் மற்றும் தென்மேற்கு பகுதிகளிலும், பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்களிலும், அண்டார்டிகாவின் பெருமளவு நிலப்பகுதியிலும் தெரியும்" என்றார்.

இதன் பொருள் அர்ஜென்டினா, உருகுவே, சிலி, பொலிவியா ஆகிய நாடுகளிலும், அண்டார்டிகா கண்டத்திலும் உள்ளவர்கள் இந்த குறை சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.

Do you know when is the solar eclipse 2022 Date and time in india

வழக்கமாக சூரிய கிரகணம் ஒரு இடத்தில் தொடங்கும், புவியின் சுழற்சி காரணமாக வேறோர் இடத்தில் முடிவடையும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்ததாக கூறுகிறது பிடிஐ.

சர்வதேச உணவுப் புகைப்படப் போட்டி: விருது வென்ற இந்தியப் புகைப்படம்

வீர் மஹான்: WWE-ல் மிரட்டும் இந்திய வீரர் - யார் இவர்?

எந்த நேரத்தில் கிரகணம் தொடங்கும்?

இந்திய நேரப்படி இந்த சூரிய கிரகணம் மே மாதம் 1ம் தேதி நள்ளிரவு 12.15 மணியளவில் தொடங்கும். அதிகபட்சமாக இந்தியாவில் தொடங்கும் நேரம் அதிகாலை 2.11. அதிகபட்சமாக இந்தியாவில் அதிகாலை 4.07 மணிக்கு முடிவடையும்

இது இரவு நேரம் என்பதால், இந்தியாவில் யாரும் இதைப் பார்க்க முடியாது என்கிறார் தேவி பிரசாத் துரை.

இதைப் போலவே மே 16ம் தேதி நிகழும் சந்திர கிரகணமும் தலைகீழாகவே நடக்கும். அது இந்தியாவில் பகல் நேரத்தில் நிகழும் என்று தெரிவித்துள்ளார் அவர். இந்திய நேரப்படி அது காலை 7.02 மணிக்கு தொடங்கும். முழுமையாக சந்திரன் காலை 7.57க்கு மறையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=gU3mR-_gQ-I

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
Do you know when is the solar eclipse 2022 Date and time in india
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X