கொல்கத்தாவில் திடீர் நிலநடுக்கம்.. வீடு - அலுவலகத்தை விட்டு அலறியடித்து ஓடிய மக்கள்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் இன்று மதியம் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்த சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகராக கொல்கத்தா உள்ளது. எப்போதும் இந்த நகரம் பரபரப்பாக இயங்கும். இந்நிலையில் தான் இன்று மதியம் திடீரென்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள கட்டடங்கள் திடீரென குலுங்கின. மேஜைகளில் இருந்த பொருட்கள் உருண்டு கீழே விழுந்தன. இதனால் ஷாக்கான மக்கள் தங்களின் வீடு மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியே ஓடிவந்தனர். காலி இடத்தில் மொத்தமாக அவர்கள் தஞ்சமடைந்தனர். திடீரென குலுங்கிய பூமியால் கொல்கத்தா மக்கள் பீதியில் உள்ளனர்.
இருப்பினும் நிலநடுக்கத்தின் அளவு என்பது உடனடியாக தெரியவில்லை. நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு பற்றி ஆராயப்பட்டு வருகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது அதிகமான அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் ரிக்டர் அளவில் 5 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, வங்கதேசத்தில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியா - வங்கதேச எல்லையாக மேற்கு வங்க மாநிலம் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வு கொல்கத்தாவிலும் உணரப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
-
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி












Click it and Unblock the Notifications