For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சர்ச்சை பேச்சு.. மனோகர் பாரிக்கருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

மத்திய அமைச்சர் மனோகர் பாரிகருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: கோவாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவா மாநில சட்டசபைக்கு வரும் பிப்ரவரி 4-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.க. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள கடும் முயற்சி எடுத்து வருகிறது. இதனிடையே கோவா மாநிலம் சிம்பெல் நகரில் பேசிய மனோகர் பாரிக்கர், கட்சிகள் நடத்தும் ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக பணம் பெறுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறியிருந்தார்.

 EC notice to Parrikar over bribe remarks

ஆனால் வாக்களிப்பதற்கு பணம் பெற்றால், அதை வாங்கிக் கொண்டு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று அவர் பேசியிருந்தார். இந்தப் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கோவாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 3ம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கோவாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பணம் வாங்கிக் கொண்டு ஆம் ஆத்மிக்கு வாக்களிக்குமாறு கூறினார். இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதுகுறித்து விளக்கம் அளித்த கேஜ்ரிவால், லஞ்சம் பெறுவதற்கு வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசவில்லை. "பிற கட்சியிலிருந்து பணம் பெற்றுக் கொண்டாலும், ஆம் ஆத்மியின் தேர்தல் சின்னத்துக்கு (துடைப்பம்) வாக்களிக்குமாறு கோரினேன்' என பேசியதாக கேஜரிவால் குறிப்பிட்டிருந்தார்.

English summary
The Election Commission on Wednesday issued a notice to Union Defence Minster Manohar Parrikar over his bribe remarks. Parrikar has been asked to reply to the notice before February 3. The notice comes two days after a political party in Goa filed a complaint against him and the AAP sought action.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X