39 ஆண்டு.. பிரதமர் மோடி உள்பட யாரும் பிரசாரம் செய்யவே முடியாது.. குஜராத்தில் அதிசய கிராமம்.. ஏன்?
காந்தி நகர்: குஜராத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் மோடி உள்பட எந்த அரசியல் தலைவரும் பிரசாரத்துக்காக நுழைய முடியாத விசித்திர கிராமம் ஒன்று உள்ளது. கடந்த 1983 முதல் 39 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் பிரசார தடை உள்ளதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் உத்தர பிரதேசம், கோவை, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் உத்தர பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் அதிக கவனத்தை ஈர்த்தது.
தற்போது ஆண்டின் இறுதிக்கட்டத்தில் இமாச்சல பிரதேசத்துக்கு சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. இன்னும் ஓட்டுக்கள் எண்ணப்படாமல் உள்ளது.

2 கட்டமாக தேர்தல்
இதன் தொடர்ச்சியாக தான் தற்போது 182 சட்டசபை தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்துக்கு 2 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலம் குஜராத் என்பதால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இங்கு டிசம்பர் 1, டிசம்பர் 5ம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு இமாச்சல பிரதேச மாநில முடிவுகளுடன் சேர்த்து வெளியிடப்பட உள்ளது.

பாஜக தீவிரம்
குஜராத்தை பொறுத்தமட்டில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரம் செய்து வருகின்றன. குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று புதிய சாதனை படைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 35க்கும் அதிகமான பொதுக்கூட்டங்களில் பேச உள்ளார். தற்போது 2 கட்டமாக 8 பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பேசி உள்ளார். அமித்ஷா உள்பட பிற மத்திய அமைச்சர்கள், உத்தர பிரதேச முதல்வர் உள்பட பிற தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

காங்கிரஸ்-ஆம்ஆத்மி பிரசாரம்
இதேபோல் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்பட மூத்த தலைவர்கள் குஜராத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம்ஆத்மி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உள்பட முக்கிய தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் குஜராத் மாநிலத்தின் தேர்தல் களம் என்பது சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள், கட்சி தலைவர்கள் போட்டிப்போட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரசாரத்துக்கு தடை
இந்நிலையில் தான் குஜராத்தில் உள்ள கிராமத்தில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ள கிராமம் எது? எதற்காக அந்த தடை? என்பது பற்றிய தகவல் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன் விபரம் வருமாறு: குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் ராஜ் சமாதியாலா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தான் அரசியல்வாதிகள் பிரசாரத்துக்காக நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் மொத்தம் 1700 பேர் வசிக்கின்றனர். இதில் 996 பேருக்கு ஓட்டுரிமை உள்ள நிலையில் அரசியல் வாதிகள் யாரும் கிராமத்துக்குள் நுழையவே முடியாத நிலை உள்ளது.

காரணம் என்ன?
அரசியல்வாதிகள் கிராமத்துக்குள் நுழைந்தால் அது தேவையில்லாத பிரச்சனையை ஏற்படுத்தலாம் என கிராம மக்கள் நினைக்கின்றனர். இதனால் தான் பிரசாரத்துக்கு கிராம மக்கள் தடை விதித்துள்ளனர். இதுதொடர்பாக கிராமத்தின் நுழைவுப்பகுதியில் போர்ட் வைக்கப்பட்டுள்ளது. இந்த போர்டில் கிராமத்தின் விதிகள் இடம்பெற்றுள்ளன. கிராம மேம்பாட்டு கமிட்டியின் இந்த முடிவுகளை மீறுவோர் அபராதம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஓட்டு போடாவிட்டால் அபராதம்
அதன்படி கிராமத்தில் ஓட்டு போட வெளியே வராதவர்களுக்கு ரூ.51 அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தேர்தலின்போது கூட சில நாட்களுக்கு முன்பு கிராம கமிட்டி கூட்டம் நடத்தப்படும். இந்த கூட்டத்தின்போது தேர்தலில் ஓட்டளிக்க முடியாதவர்கள் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கூறினால் அபராதம் செலுத்த வேண்டியது இருக்காது. மாறாக காரணத்தை கூறாமல் ஓட்டளிக்காவிட்டால் ரூ.51 அபராதத்தை அவர்கள் கட்டாயம் செலுத்த வேண்டும் என்பது நடைமுறையாக உள்ளது.

1983 முதல் நடைமுறை
இதுபற்றி அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‛‛இந்த கிராமத்தில் 1983 முதல் அரசியல் கட்சியினரை அனுமதிப்பது இல்லை. எந்த கட்சியும் கிராமத்துக்குள் பிரசாரத்துக்கு வரமுடியாது. இதை காலம் காலமாக பின்பற்றி வருகிறோம். இதேபோல் தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என்பதை கிராமம் விரும்புகிறது இதனால் ஓட்டளிக்காதவர்களுக்கு ரூ.51 அபராதமாக விதிக்கப்படுகிறது. ஒருவேளை ஓட்டளிக்க முடியாத காரணத்தை முன்கூட்டியே கூறினால் அபராதம் விதிக்கப்படாது'' என்றார்.

கிராம மக்கள் கூறுவது என்ன?
இதுபற்றி அந்த கிராம மக்கள் கூறுகையில், ‛‛நாங்கள் கிராமத்தில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களை பிரசாரம் செய்ய அனுமதிப்பது இல்லை. இருப்பினும் பொதுமக்கள் அனைவரும் தங்களின் விருப்பமான வேட்பாளருக்கு ஓட்டளிக்கலாம். இதில் கிராம நிர்வாகம் எதுவும் தலையிடாது. எங்கள் கிராமத்தை பார்த்து தற்போது அருகே உள்ள 5 கிராமங்களும் இந்த முடிவை எடுத்துள்ளன. அங்கும் அபராத முறை நடைமுறையில் உள்ளது. இதை அனைத்து கிராமங்களும் பின்பற்றினால் மக்களுக்கு நன்மை செய்ய விரும்பும் வேட்பாளர் வெற்றி பெறுவார்'' என்றனர்.

மோடி உள்பட யாராலும் முடியாது
இதன்மூலம் பிரதமர் மோடி உள்பட யாரும் கிராமத்துக்குள் நுழைந்து பிரசாரம் செய்ய முடியாத நிலை உள்ளது. இருப்பினும் கூட கிராமத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இணையதள வசதி, வைபை, கண்காணிப்பு கேமரா, ஆர்ஓ குடிநீர், அகலமான ரோடு வசதிகள் உள்பட அனைத்து வசதிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications