For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தானாக சரண்டைந்தவர் என் கணவர், கருணை காட்டுங்கள்: யாகூப் மேனன் மனைவி கோரிக்கை

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: தானாக வந்து சரணடைந்ததாதல் அவரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று யாகூப் மேமனின் மனைவி ரஹின் தெரிவித்துள்ளார்.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமன் வரும் 30ம் தேதி தூக்கிலிடப்பட உள்ளார். இந்நிலையில் யாகூபின் மனைவி தனது கணவரின் தண்டனையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Even if He Isn't Considered Innocent, Let him Live: Yakub Memon's Wife

இது குறித்து அவர் கூறுகையில்,

எனக்கு நீதியின் மீது நம்பிக்கை உள்ளது. யாகூபின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு நான் அரசிடம் கேட்டுள்ளேன். அப்பாவி தான் சரணடைவார். அவர் சரண் அடைந்தும் அவர் அப்பாவி என்று புரிந்துகொள்ளவில்லை என்றால்... அவர் மீது கருணை காட்ட வேண்டும்.

மும்பை சம்பவத்திற்கு பிறகு எங்கள் குடும்பம் இந்தியாவை விட்டு ஓடிவிடவில்லை. குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்பு ரம்ஜான் பண்டிகையை கொண்டாட துபாய் சென்றோம் என்றார்.

யாகூப் மேமனின் குடும்பத்தார் கராச்சியில் வசித்து வருவதாக விசாரணையாளர்கள் தெரிவித்தனர். 1994ம் ஆண்டு சரண் அடைவது குறித்து வழக்கறிஞரை சந்திக்க சென்ற இடத்தில் காத்மாண்டுவில் வைத்து யாகூப் கைது செய்யப்பட்டார்.

English summary
Yakub Memon's wife Rahin has asked the government to reduce her husband's death sentence to life term.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X