For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாக்குப் பதிவு எந்திரத்தில் முறைகேட்டை நிரூபிக்க தயாரா.. தொடங்கியது தேர்தல் ஆணையத்தின் சவால்

வாக்குப் பதிவு எந்திரத்தில் முறைகேட்டை நிரூபிக்க தயாரா என்ற தேர்தல் ஆணையத்தின் சவாலை இரு கட்சிகள் ஏற்ற நிலையில் அதற்கான சோதனைகள் இன்று தொடங்கியது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: வாக்குப் பதிவு எந்திரத்தில் முறைகேட்டை நிரூபிக்க முடியும் என்ற சவாலை இரு கட்சிகள் எதிர்கொண்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் டெல்லி தேர்தல் ஆணையத்தில் காலை 10 மணிக்கு தொடங்கியது.

இந்த ஆண்டு உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. உத்தரப்பிரதேசத்தில் பாஜக 312 இடங்களில் அபாரமாக வெற்றி பெற்றது.

இதேபோல் உத்தரகண்ட்டிலும் பாஜக அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, வாக்குப் பதிவு எந்திரங்களில் எந்த பொத்தானை அழுத்தினாலும் அது பாஜகவுக்கு வாக்களிக்கும்படி முறைகேடு செய்யப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார்.

எதிர்க்கட்சிகள் கைகோர்த்தன

எதிர்க்கட்சிகள் கைகோர்த்தன

இதைத் தொடர்ந்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் வாக்குப் பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது பிற எதிர்க்கட்சிகளும் கைகோத்து கொண்டன. மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை தொடர்பாக தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.

கட்சிகளுக்கு சவால்

கட்சிகளுக்கு சவால்

இந்த முறைகேட்டை தவிர்க்க வாக்குச் சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுத்தன. இதைத் தொடர்ந்து எந்திரத்தை ஹேக் செய்வது தொடர்பாக நிரூபிக்க அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நேரடியாக சவால் விடுத்தது.

ஜூன் 3-இல் சவால்

ஜூன் 3-இல் சவால்

இதைத் தொடர்ந்து ஜூன் 3-ஆம் தேதி டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் வாக்குப் பதிவு எந்திரங்கள் மீது சோதனைகள் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் பங்கேற்று நிரூபிக்க அரசியல் கட்சிகள் முன்னரே பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

இரண்டு கட்சிகள் மட்டுமே

இரண்டு கட்சிகள் மட்டுமே

தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் மட்டுமே சவாலில் பங்கேற்க பதிவு செய்துள்ளன. அதன்படி இன்று தேர்தல் ஆணைய அலுவலகத்தில் காலை 10 மணிக்கு வாக்குப் பதிவு எந்திரங்கள் மீதான சோதனை தொடங்கியது. இது பிற்பகல் 2 மணிக்கு முடிவடையும். இதுபோன்ற சவாலை கடந்த 2009-ஆம் ஆண்டும் தேர்தல் ஆணையம் விடுத்தது. ஆனால் யாராலும் மின்னணு ஒட்டுப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
As per the Election commission announced that EVM machines used in the recently concluded elections is undergoing Narco Analysis to rule out the possibility of them being tampered with today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X