Exclusive:அக்னி-5 ஏவுகணை சோதனை ஒரு மைல் கல்-அவினாஷ் சந்தர்
பெங்களூரு: அக்னி-5 ஏவுகணை வெற்றி புதிய அத்தியாயத்தை தொடங்க வழிகோலியுள்ளதாக பெருமை தெரிவித்தார் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மே்பாட்டு அமைப்பின் (drdo) முன்னாள் தலைவர் அவினாஷ் சந்தர்.
அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை கடந்த வாரம் வெற்றிகரமாக நடந்தது. இந்தியாவிடம் ஏற்கனவே பிருதிவி, ஆகாஷ், நாக், திரிசூல், அக்னி ஏவுகணைகள் உள்ளன. அக்னி ரக ஏவுகணைகளில் அக்னி-1 ஏவுகணை 700 கிலோ மீட்டர் தூரமும், அக்னி-2 ஏவுகணை 2 ஆயிரம் கி.மீ. தூரமும், அக்னி-3 ஏவுகணை 2,500 கி.மீ. தூரமும், அக்னி-4 ஏவுகணை 3,500 கி.மீ. தூரமும் சென்று தாக்க வல்லவை.
17.5 மீட்டர் நீளமும் 2 மீட்டர் அகலமும் கொண்ட அக்னி-5 ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. 1 டன் எடையுள்ள அணுஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரத்துக்கும் அதிகமான கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கக்கூடியது.

தொலை தூரம் பாய்ந்து தாக்கும் அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்ட நிலையில், (அப்போதைய) டிஆர்டிஓ தலைவர் அவினாஷ் சந்தர் 'ஒன்இந்தியாவுக்கு' அளித்த சிறப்பு பேட்டி:
அக்னி-5 ஏவுகணை எங்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை தந்துள்ளது. நடமாடும் வாகனத்தில் இருந்து இதுபோன்ற ஒரு சக்தி வாய்ந்த ஏவுகணையை ஏவியது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே, எந்த ஒரு இடத்தில் இருந்தும், சக்தி வாய்ந்த ஏவுகணையை ஏவும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. குறிதவறாமல் இலக்கை தாக்கும் இந்த ஏவுகணை, டிஆர்டிஓ வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். இன்னும் பல ஏவுகணை சோதனைகள் நடத்த இந்த வெற்றி உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications