For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகா தேர்தல்: பிபிசியின் பெயரால் டுபாக்கூர் கருத்து கணிப்பை உலவவிட்ட பாஜக

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    பிபிசியின் பெயரால் டுபாக்கூர் கருத்து கணிப்பை உலவவிட்ட பாஜக- வீடியோ

    பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக 135 இடங்களையும் காங்கிரஸ் வெறும் 35 இடங்களைத்தான் கைப்பற்றும் என பிபிசி இணையதளத்தில் கருத்து கணிப்பு செய்தி இடம்பெற்றுள்ளதாக ஒரு பொய்ச்செய்தியை பாஜகவினர் உலவவிட்டனர்.

    கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பை ஜன் கி பாத் வெளியிட்டிருந்தது. இதை ரிபப்ளிக் டிவியும் ஒளிபரப்பியது.

    Fake Janta Ki Baat opinion poll with BBC News

    அதில் பாஜக 102 முதல் 108; காங்கிரஸ் 72 முதல் 74; மதச்சார்பற்ற ஜனதா தளம் 42 முதல் 44 இடங்கள் வரை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பாஜக அதிக இடங்களைப் பெற்றாலும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காது என்கிறது இந்த கருத்து கணிப்பு.

    ஆனால் பாஜகவினரோ இந்த கருத்து கணிப்பை வைத்து சமூக வலைதளங்களில் பெரும் கூத்தையே நடத்தி இருக்கின்றனர். ஜன்கிபாத் கருத்து கணிப்பை பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. மொத்தம் 10.20 லட்சம் பேரிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. பாஜக மொத்தம் 135 இடங்களில் வெல்லும்.

    மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 45 காங்கிரஸுக்கு வெறும் 35 இடங்கள்தான். இதர கட்சிகளுக்கு 19 இடங்கள் கிடைக்கும் என ஒரு பொய்ச்செய்தியை தயார் செய்து சமூக வலைதளங்களில் உலவ விட்டனர். இதில் வேடிக்கை என்னவெனில் பாஜகவினரின் இந்த பொய் செய்தி கணக்குப்படி கர்நாடகாவில் மொத்தம் 234 தொகுதிகள் வருகிறது.

    அங்கு மொத்தமே 224 தொகுதிகள்தான் என்பதை கூட பொய்யர்கள் உணரவில்லை போலும். பிபிசி செய்தி நிறுவனம் தாங்கள் அப்படி ஒரு செய்தியையே வெளியிடவில்லை என திட்டவட்டமாக மறுத்திருக்கிறது.

    பாஜகவினரின் பிபிசி பெயரிலான டுபாக்கூர் கருத்து கணிப்பு ஒரே நாளில் அம்பலமாகிப் போனது!

    English summary
    A fake survey on Karnataka polls has been circulating on Whats App and claims to be from BBC News.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X