தலைநிமிறும் சென்னை.. விரைவில் வரப்போகுது அறிவிப்பு.. கம்மி காசில் சல்லுனு அயோத்திக்கு போலாம்.. வாவ்
கான்பூர்: வருகிற பிப்ரவரி 1ம் தேதி முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை துவங்கும் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.. இப்படி ஒரு சர்ப்ரைஸை தந்தது யார் பாருங்க.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் முடிவடைந்துள்ளன. 54,700 சதுர அடி பரப்பளவில் 360 அடி நீளமும் 235 அடி அகலமும், தரையில் இருந்து 16.5 அடி உயரமும் கொண்டது இந்த கோயில். நம்முடைய பின் இந்தியாவில் கட்டப்படும் மிகப் பிரம்மாண்டமான முதல் திருக்கோயில் இதுதான் என்பது கூடுதல் பெருமையாகும்.

பாதுகாப்பு: இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக பிரமுகர்கள் மற்றும் இந்தியா முழுவதுமுள்ள விவிஐபிக்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். இதனை முன்னிட்டு உ.பி.அரசு பக்தர்களின் வசதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில், அயோத்தி நகருக்கு ரயில் சேவை, விமான சேவையும் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது... காரணம், கும்பாபிஷேக பணிகள் உட்பட பாதுகாப்பு பணிகளையும் கவனித்து வருவதே உபி முதல்வர் யோகிதான்.
சுற்றுலா துறை: இப்படிப்பட்ட சூழலில்தான், அயோத்தியை நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கொண்டு வர அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு அறிவிப்புகளை அம்மாநில அரசு முன்னெடுத்து வருகிறது..
அதன் ஒரு பகுதியாகவே, அயோத்திக்கு ஹெலிகாப்டர் சேவையை தொடங்க உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி லக்னோ, கோரக்பூர், பிரயாக்ராஜ், வாரணாசி, ஆக்ரா மற்றும் மதுரா ஆகிய இடங்களில் இருந்து அயோத்திக்கு ஹெலிகாப்டர் சேவையை வழங்க உள்ளதாக தெரிகிறது.
ஹெலிகாப்டர் சேவை: இன்று ஜனவரி 19ம் தேதி வெள்ளிக்கிழமை லக்னோவில் இருந்து ஹெலிகாப்டர் சேவையை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைக்கிறார்... ஹெலிகாப்டர் சேவைகளுக்கான கட்டணத்தையும் அரசு நிர்ணயித்துள்ளது. இந்த ஹெலிகாப்டர் சேவையை எதிர்காலத்தில் மாநிலத்தின் பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துவதற்கான பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
இதைத்தவிர, அயோத்தி நகரம் மற்றும் ராமர் கோயிலின் வான்வழி தரிசனத்தையும் பக்தர்களுக்காக உத்தரப்பிரதேச மாநில அரசு அறிமுகப்படுத்துகிறது. இதற்கான பொறுப்பும் சுற்றுலா துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ரிசர்வேஷன்: வான்வழி தரிசனத்தில் ஆர்வமுள்ள பக்தர்கள், முன்கூட்டியே ரிசர்வ் செய்ய வேண்டுமாம்.. இந்த ஹெலிகாப்டர் சவாரிகள் சரயு நதிக்கரையில் உள்ள சுற்றுலா விருந்தினர் மாளிகைக்கு அருகிலுள்ள ஹெலிபேடில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமானம் இயக்கப்படும் என்று ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதற்கான கட்டணமாக ரூ.6,499 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணமானது, பண்டிகை நாட்கள், வார இறுதி நாட்களில் உயரும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல், பெங்களூரு, மும்பை நகரங்களில் இருந்தும் அயோத்திக்கு நேரடி விமான சேவை துவங்கும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
ரயில்கள்: அயோத்திக்கு செல்ல "ஆஸ்தா" என்ற சிறப்பு ரயில்களும் அறிமுகமாகி உள்ளன.. மொத்தம் 66 நகரங்களில் இருந்து இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிகிறது.. நம்முடைய தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம் உட்பட, 9 நகரங்களிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாம்.. அந்தவகையில், வரும் ஜனவரி 22ம் தேதி முதல் இந்த ரயில் பயணம் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications