பெங்களூரு சிறையில் அடுத்தடுத்து பரபரப்பு...சசிகலாவை சந்தித்த 5 எம்எல்ஏக்கள் !

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு : அதிமுக எம்எல்ஏக்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பன், முருகன், கென்னடி, பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் சசிகலாவை இன்று பெங்களூரு பரபப்பன அக்ரஹாரா சிறையில் சந்தித்தனர்.

அதிமுகவின் முதல்வராக பழனிசாமி ஆட்சியமைக்க உரிமை கோரிய போது முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்டோருக்கு பதவி வழங்குவதாக ஒப்புகொள்ளப்பட்டதகாவும் இதைநிறைவேற்றும் படி தொடர்ந்து முதல்வருக்கு இவர்கள் நெருக்கடி கொடுத்து வந்தனர்.

Followed by Thambidurai and Dinakaran 5 MLAs met Sasikala

ஆனால் சசிகலாவைத் தொடர்ந்து தினகரனும் சிறை சென்றுவிட நானா உத்தரவாதம் கொடுத்தேன், உறுதியளித்தவர்களிடம் கேளுங்கள் என்று முதல்வர் கூறிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தினகரன் ஜாமினில் வெளிவந்ததும் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் டெல்லிக்கே சென்று வரவேற்பு அளித்ததோடு, படு குஷி ஆனார்கள். ஆனால் 60 நாட்கள் பொறுத்திருக்குமாறு தினகரனுக்கு சசிகலா உத்தரவிட்டுவிட அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் அமைதி காத்தனர்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, டிடிவி. தினகரன் உள்ளிட்டோர் சந்தித்து சென்றதையடுத்து செந்தில்பாலாஜி,பழனியப்பன், முருகன், கென்னடி,பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பின் போது கட்சி மற்றும் ஆட்சியில் நடக்கும் குளறுபடிகள் குறித்து இவர்கள் சசிகலாவிடம் எடுத்துச் சொன்னதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMK amma camp's 5 MLAs met Sasikala at Bangalore Parappana agrahara and explains the party, government's conditions
Please Wait while comments are loading...