For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முடிந்துபோனதா மோடி அலை.. கர்நாடக கள நிலவரம் பாஜக கண்ணை கட்டுதே

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் வழக்கு தள்ளுபடி- வீடியோ

    பெங்களூர்: பிரதமர் நரேந்திர மோடி வெல்ல முடியாத தலைவராக இனியும் இல்லை என்பதை கர்நாடக தேர்தல் நிலவரம் காண்பிக்கிறது.

    2014ல் தமிழகம், கேரளா போன்ற ஒரு சில மாநிலங்கள் தவிர்த்து பெரும்பாலான மாநிலங்களில் மோடி அலை வீசியது. இந்திரா காந்தி காலத்திற்கு பிறகு, அறுதி பெரும்பான்மையுடன் மோடி தலைமையில் பாஜக அரியணை ஏறியது.

    இதன்பிறகு மளமளவென 21 மாநிலங்களில் பாஜக கூட்டணிகள் ஆட்சியை பிடித்துவிட்டன. கர்நாடகா, மிசோராம், பஞ்சாப் ஆகிய மூன்று மாநிலங்களில்தான் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    தோற்கடிக்க முடியாத தலைவர்

    தோற்கடிக்க முடியாத தலைவர்

    ஆனால், சமீப காலமாக பாஜக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. தோற்கடிக்கவே முடியாத தலைவர் என்ற நிலையில் இருந்து மோடியின் நிலை கீழே இறங்கி வருகிறது. வட கிழக்கு மாநிலங்களில் பெற்ற வெற்றியால் பாஜக, களிப்படையும் முன்பே, லோக்சபா இடைத் தேர்தல்களில் தோல்வியடைந்து பாஜக தொண்டர்கள் உற்சாகமிழந்துள்ளனர்.

    அரையிறுதி ஆட்டம்

    அரையிறுதி ஆட்டம்

    இந்த நிலையில்தான் கர்நாடக தேர்தல்கள் பாஜகவுக்கு மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. பெரிய மாநிலமான கர்நாடக தேர்தல் என்பது அடுத்த வருடம் நடைபெற உள்ள லோக்சபாவுக்கு முந்தைய அரையிறுதி ஆட்டத்தை போன்றது. இதில் தோல்வியடைந்தால், பாஜக அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலை சந்திக்க மனதளவில் தைரியத்தை இழந்துவிடும். மோடி அலை இல்லை என்ற சூழல் உருவாகிவிடும்.

    பாஜக ஆட்சி நடந்த மாநிலம்

    பாஜக ஆட்சி நடந்த மாநிலம்

    கர்நாடகாவில் ஏற்கனவே ஒருமுறை பாஜக ஆட்சி அமைந்துள்ளது. எனவே அந்த மாநிலத்தில் கூட ஆட்சியை பிடிக்க முடியாவிட்டால், மோடி அசைக்க முடியாத தலைவர் என்ற அந்தஸ்தை இழந்துவிடுவார் என நினைக்கிறார்கள் பாஜகவினர். எனவே, கர்நாடக தேர்தலில் வெற்றிபெற்றேயாக வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு உள்ளது. வாழ்வா, சாவா போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இதே நிலை என்றபோதிலும், அடுத்த லோக்சபா தேர்தலிலும் தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியை பிடிக்கலாம் என கனவு காணும் பாஜகவுக்கும் அதி முக்கிய தேர்தலே.

    காங்கிரசுக்கு சான்ஸ்

    காங்கிரசுக்கு சான்ஸ்

    ஆனால், கள ஆய்வாளர் சோனல் வர்மா மற்றும் நோவ்முரா ஹோல்டிங்ஸ் அமைப்பு சமீபத்தில் கூறிய கணிப்புப்படி, கர்நாடகாவில் பாஜக பின்சீட்டில்தான் இருக்கிறதாம். காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளதாம். வென்றேயாக வேண்டும் என்ற குறியோடு உள்ள பாஜக தீவிரமாக களமாடத் தொடங்கியுள்ளது. இதுவரை புதிதாக கர்நாடகாவில் 7.5 லட்சம் தொண்டர்களை, அக்கட்சி, சேர்த்துள்ளது. நட்சத்திர பட்டாளங்களை பிரச்சாரத்திற்கு களமிறக்க உள்ளது. ஊரக பகுதி மக்களுக்கு பாஜக எதிரான கட்சி என்ற தோற்றத்தை மாற்ற விவசாய திட்டங்கள் பற்றி தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது.

    லோக்சபா தேர்தல் திட்டம்

    லோக்சபா தேர்தல் திட்டம்

    ஒருவேளை கர்நாடகாவில் பாஜக சிறப்பான வெற்றியை பெற்றால், இவ்வாண்டு இறுதியில், அதாவது, முன்கூட்டியே லோக்சபாவுக்கு தேர்தல் நடத்த பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் பாஜக தோற்றாலோ, மோடி அலை இல்லை என்ற தோற்றம் நாடு முழுக்க பரவும் என்பதால், லோக்சபா தேர்தலை அடுத்த ஆண்டு சந்திக்க பாஜக ஆயத்தமாகும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.

    English summary
    In 2014 and the years that followed, Narendra Modi was invincible. Modi and the BJP would hope to keep that tag intact and for that the BJP would have to win and win big in Karnataka. The past couple of months have seen several ups and downs for the BJP. The party was all smiles with its impressive performance in North-East. This boosted the morale of the party workers especially in Karnataka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X