Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரோல்ஸ் ராய்ஸ் முதல் ஃபெராரி வரை! ஆயுதபூஜை போட்ட இந்தியாவின் பணக்கார MLA

Subscribe to Oneindia Tamil

இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ ஒருவர் தனது ஆடம்பரமான கார்களை வைத்து ஆயுத பூஜை விழாவை கொண்டாடிய வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.

நவராத்தி பண்டிகையை இந்தியா முழுக்க உள்ள இந்துகள் மிக விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக ஒன்பதாம் நாள் ஆயுதபூஜை கொண்டாடப்படுகின்றது. சாதாரண ஆட்டோ ஓட்டும் தொழிலாளி முதல் மிகப்பெரிய தொழில்நிறுவனங்கள் வரை அனைவரும் அன்று தங்களின் வருமானத்திற்கு உதவிகரமாக இருக்கும் ஆயுதங்களை, வாகனங்களை வைத்து வழிபடுவார்கள்.

mla karnataka

அப்படிதான் இந்த ஆண்டு ஆயுதபூஜையை கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ ஒருவர் கொண்டாடி இருக்கிறார். அது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீயாக பரவி வருகிறது.

அப்படி என்ன அந்த வீடியோவில் இருக்கிறது எனப் போய் பார்த்தால், அவர் வீட்டு முன்பாக உலகில் உள்ள விலை உயர்ந்த கார்கள் அனைத்து வரிசை கட்டி நிறுத்தப்பட்டுள்ளன. அதில் ரோல்ஸ் ராய்ஸ், ஃபெராரி வரை பல ஆடம்பரமான கார்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ வெளியான பிறகுதான் இந்தியாவிலேயே பணக்கார எம்.எல்.ஏ இவர்தான் என்ற தகவல் கவனத்திற்கு வந்துள்ளது.

வெறும் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இந்த எம்.எல்.ஏ கடந்த பாஜக ஆட்சி காலத்தில் சிறு தொழில் மற்றும் நகராட்சி நிர்வாகம் துறையின் அமைச்சராக இருந்துள்ளார். அதற்கு முன்பாக பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த இவர் 2019இல் பாஜகவில் இணைந்துள்ளார்.

தற்போது 73 வயது இவர் பாஜகவின் சார்பில் கர்நாடக மாநிலத்தின் மேலவை உறுப்பினராக இருந்து வருகிறார். இந்த பில்ட் அப் எல்லாம் இருக்கட்டும் அவர் பெயர் என்ன? என்று உங்களுக்கு கேட்க தோன்றுகிறதா? இந்த இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏவின் பெயர் எம்.டி.பி. நாகராஜ். இவர் வீடே ஏதோ ஸ்டார் ஹோட்டல் போல் இருக்கிறது.

அந்த வீட்டுக்கு முன்பாக பல கோடி மதிப்புள்ள ஆடம்பர கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. அதில் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் சீரிஸ் VIII என்ற சொகுசு காரும் ஒன்று. இந்த காரின் ஷோரூம் விலையே ரூ.12 கோடிக்கு மேல் வரும். வெள்ளை கலரில் இதைப் பார்க்கவே ரதம் போல் இருக்கிறது.

அடுத்து Ferrari F8 Tributo Berlinetta ஒன்றும் இந்த ஆயுதபூஜை படையலில் இடம்பெற்றுள்ளது. இதன் விலை ரூ. 4 கோடிக்கு மேல் வரும். ஆக, இந்த இரண்டு கார்களின் மொத்த விலையே 16 கோடிக்கு மேல் வருகிறது. இந்த இரண்டும் போதாது என்று லேண்ட் ரோவர் டிஃபென்டர் 110 ஒன்றை வாங்கி நிறுத்தி இருக்கிறார் இந்தப் பணக்கார எம்.எல்.ஏ. இதன் விலை சுமார் ரூ.2.85 கோடி இருக்கும். இப்போது சமீபத்திதான் எம்.டி.பி நாகராஜன் BMW XM காரை கடந்த ஜூன் மாதம் வாங்கியுள்ளார். இது ரூ. 2.6 கோடி வரும்.

அதாவது இன்றைய மாடர்ன் உலகில் என்னென்ன கார்கள் சந்தையில் உள்ளதோ அதில் ஒன்றை இவர் வைத்திருக்கிறார். மேலும் இவரது சேகரிப்பில் டொயோட்டா ஃபார்ச்சூனர், 2 இன்னோவா கிரிஸ்டா எம்பிவிகள் உள்ளன. அதனை வாகனங்களும் ஆயுதபூஜை செய்யப்பட்டு அவர் வீட்டில் இருந்து ஒவ்வொன்றாக வெளியேறுவதை வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளனர்.

அந்தக் காணொளியில் இறுதியாக, ஒரு மாருதி ஆம்னி காரும் வீட்டில் இருந்து வெளியேறுகிறது. அதாவது ஆடம்பரமான வெளிநாட்டு கார் ரோல்ஸ் ராய்ஸ் தொடங்கி இறுதியாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட மாருதி வரை வகை வகையான கார்கள் இவரிடம் உள்ளன என்பதை இந்த வீடியோ புரியவைத்துள்ளது.

இவர் இவ்வளவு கார்களை வைத்திருந்தது இதுவரை பலருக்கும் தெரியவாய்ப்பில்லை. அவர் வீட்டு வாசலில் வரிசையாக நிறுத்தி ஆயுதபூஜை கொண்டாடியதால் இப்போது அவரது ஆடம்பர வாழ்க்கை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+