Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரயாக்ராஜ் நகருக்கு சென்ற கவுதம் அதானி! குடும்பத்தினருடன் திரிவேணி சங்கமத்தில் சிறப்பு வழிபாடு

Subscribe to Oneindia Tamil

பிரயாக்ராஜ்: அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தனது குடும்பத்தினருடன் மகா கும்பமேளாவின் புனித திரிவேணி சங்கமத்திற்குச் சென்றார். சனாதனத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட அதானி குடும்பம் புனித கங்கை நதியிடம் ஆசீர்வாதம் பெற்றனர். கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் பிரார்த்தனையும் செய்தனர்

மகா கும்பமேளா குறித்த தனது பிரமிப்பை வெளிப்படுத்திய அதானி, "பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட அனுபவம் அற்புதமானது. இதைச் சிறப்பாக நடத்தி வரும் நிர்வாகத்தை நாம் பாராட்டியே தீர வேண்டும். இதற்காக நாட்டு மக்களின் சார்பாகப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வை எப்படி இவ்வளவு சிறப்பாக நடத்துகிறார்கள் என்பதை மேலாண்மை நிறுவனங்களே கூட ஆராய்ச்சி செய்யலாம். அவ்வளவு அற்புதமாக நடத்துகிறார்கள். என்னைப் பொறுத்தவரைக் கங்கை தாயிடம் ஆசீர்வாதம் வாங்குவதைத் தாண்டி வேறு எதுவும் சிறப்பானது இல்லை" என்றார்

maha kumbh mela 2025 gautam adani 2025

சனாதனத்தை மதிக்கும் அதானி குடும்பம்

சனாதன மரபுகள் மீது எந்தளவுக்கு ஒரு ஆழமான நம்பிக்கையை அதானி வைத்துள்ளார் என்பதையே அவரது இந்த பயணம் எடுத்துக் காட்டுகிறது. ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தின் மாபெரும் சங்கமமாக மகா கும்பமேளா இருக்கிறது. இந்த நிகழ்வில் பக்தியின் ஒரு வடிவமாக மனிதக் குலத்திற்குச் சேவை செய்வதில் தனது குடும்பத்திற்கு எந்தளவுக்கு உறுதியான நம்பிக்கை வைத்துள்ளது என்பதையே அதானியின் பங்களிப்பு காட்டுகிறது.

அதானியின் இந்த தன்னலமற்ற சேவைகளைப் புகழ்பெற்ற ஆன்மீக தலைவர் பிரசாத் சுவாமி பாராட்டினார். பிரசாத் சுவாமி மேலும் கூறுகையில், "கார்ப்பரேட் பொறுப்பு மற்றும் சமூக சேவைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அதானி குழுமம் இருக்கிறது. கவுதம் அதானி எப்போதும் தனது பணிவுக்காகத் தனித்துத் தெரிவார். யாராவது தன்னை அழைக்க வேண்டும் என காத்திருக்க மாட்டார். அவரே முன்னின்று சேவைகளைச் செய்வார்" என்றார

ஆன்மீக அனுபவத்தை மேம்படுத்துவது

பிரயாக்ராஜ் நகருக்கு கவுதம் அதானி வந்ததும், பக்தர்களுக்குச் சேவை செய்வதில் அவரது குடும்பத்தினர் காட்டிய ஆர்வமும், சனாதன தர்மத்தின் மீது நவீன தலைமைக்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டுகிறது. அதானி குழுமத்தைப் பொறுத்தவரை, சமூக சேவை என்பது அவர்களுக்கு வேலை இல்லை.. அதை ஒரு வாழ்க்கை முறையாகவே கடைப்பிடித்து வருகிறார்கள். மேலும், பணிவு, நம்பிக்கை மற்றும் தன்னலமற்ற சேவை ஆகிய இந்திய பண்புகளுடன் நெருக்கமான தொடர்பை வைத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+