பேண்ட்டை கழற்றுங்க.. இடுப்பு வலிக்கு சிகிச்சைக்கு போன பெண்ணிடம் அத்துமீறிய டாக்டர்

Subscribe to Oneindia Tamil

பானாஜி: டாக்டர்கள் கடவுளுக்கு சமம் என்று சொல்லப்படுவது உண்டு. கொரோனா பெருந்தொற்று காலத்தில் நேரம் காலம் பார்க்காமல் அவர்கள் செய்த பணி, உலகம் உள்ள வரை நினைவில் வைக்கத் தக்கது.

ஆனால், சில மருத்துவர்கள் செய்யும் பெரும் தவறு வரலாற்று கறையாக மாறிவிடுவதையும் மறுக்க முடியாது. அப்படியான ஒரு சம்பவம்தான் கோவா மாநிலத்தில் நடந்துள்ளது.

கோவா மாநிலத்தின் மபுசா என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஆர்தோபிடிக் நிபுணர்தான் பாலியல் சில்மிஷம் செய்து சிக்கலில் மாட்டிய மருத்துவர்.

பிரசித்தி பெற்ற மருத்துவர்

பிரசித்தி பெற்ற மருத்துவர்

இத்தனைக்கும் இவர் அந்த பகுதியில் ரொம்பவே பிரசித்தி பெற்ற மருத்துவர் என்று கூறப்படுகிறது. சம்பவத்தன்று, நடுத்தர வயதுள்ள பெண் தனக்கு இடுப்பு வலி இருப்பதாக கூறி இவரிடம் சிகிச்சைக்கு சென்றார். அப்போது கணவர் அவருடன் செல்லவில்லை. மருத்துவர் அறைக்குள் சென்றதும், இந்த பெண்ணை அங்கேயிருந்த படுக்கையில் படுக்குமாறு டாக்டர் கூறியுள்ளார்.

நெருங்கிய டாக்டர்

நெருங்கிய டாக்டர்

குப்புற படுக்குமாறு டாக்டர் கூறியதால் அந்த பெண்ணும் அப்படியே செய்துள்ளார். இதன்பிறகு வலி எங்கே இருக்கு என்று, அந்த பெண் அணிந்திருந்த பேண்ட்டை அவிழ்த்தபடி கேட்ட டாக்டர், ஒருபடி மேலே போய், அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பை தொடும் நோக்கத்தில் கையை அருகே கொண்டு சென்றுள்ளார்.

டாக்டருக்கு அறை

டாக்டருக்கு அறை

இதை பார்த்ததும், நடக்கப்போவதை புரிந்து கொண்ட அந்த பெண், டாக்டர் கையை தட்டி விட்டு, பேண்ட்டை எடுத்து போட்டுக் கொண்டு, ரூமை விட்டு வெளியேறிவிட்டார். காருக்குள் சென்று உட்கார்ந்தபடி அழுதுகொண்டிருந்த அந்த பெண், நடந்த சம்பவம் பற்றி தனது கணவருக்கு போனில் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, விரைந்து வந்த அந்த பெண்ணின் கணவர் டாக்டர் அறைக்குள் சென்று, அவரை ஓங்கி அறைந்துள்ளார்.

 போலீசில் புகார்

போலீசில் புகார்

டாக்டரை அடித்தால் தண்டனை அதிகம் என சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளதால், பயந்துபோன கணவர், உடனே போலீசுக்கு சென்று நடந்தவற்றை கூறினார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விசாரணை

விசாரணை

இதனிடையே, பெண்ணுக்கு சிகிச்சையளிக்கும்போது உதவி செய்ய பெண் ஊழியர் ஏன் அங்கே இல்லை என்பது போன்ற கேள்விகளை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இடுப்பு வலிக்கு சிகிச்சை பெற போன பெண்ணிடம் டாக்டர் பாலியல் சில்மிஷம் செய்த சம்பவம் கோவா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+