For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவா சட்டசபை தேர்தல்: பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா- துண்டு துண்டாக சிதறுகிறது?

Google Oneindia Tamil News

பனாஜி: கோவா சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பாஜகவின் 4 தலைவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததுடன் அக்கட்சியில் இருந்தும் விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவா மாநில சட்டசபை தேர்தல் பிப்ரவரி 14-ந் தேதி நடைபெற உள்ளது. பாஜகவுக்கு இந்த தேர்தலில் தொடக்கம் முதலே இறங்குமுகமாகத்தான் இருந்து வருகிறது.

2017 சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்க உதவிய கோவா பார்வார்ட் கட்சி, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது. கோமந்த் கட்சியானது திரிணாமுல் காங்கிரஸுடன் கை கோர்த்தது. அத்துடன் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி என கட்சிகள் வரிசை கட்டி களமிறங்கி இருப்பதும் பாஜகவுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.

தேசிய வல்லமை தின போராளி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் - குடியரசுத்தலைவர், பிரதமர் புகழாஞ்சலிதேசிய வல்லமை தின போராளி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் - குடியரசுத்தலைவர், பிரதமர் புகழாஞ்சலி

 இறங்குமுகம்தான்

இறங்குமுகம்தான்

2017 சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்க உதவிய கோவா பார்வார்ட் கட்சி, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது. கோமந்த் கட்சியானது திரிணாமுல் காங்கிரஸுடன் கை கோர்த்தது. அத்துடன் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி என கட்சிகள் வரிசை கட்டி களமிறங்கி இருப்பதும் பாஜகவுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.

மனோகர் பாரிக்கர் மகன்

மனோகர் பாரிக்கர் மகன்

இருப்பினும் கோவா சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றே கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இந்த நிலையில் கோவா பாஜக மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவதுடன் அக்கட்சியை விட்டு விலகியும் வருகின்றனர். கோவாவில் பாஜகவின் முகமாக இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர். மனோகர் பார்க்கரின் மகன் உட்பல் பாரிக்கர் தேர்தலில் சீட் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு பாஜக சீட் தரவில்லை. இதனால் பாஜகவை விட்டு வெளியேறிய உட்பல், சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

மாஜி முதல்வர் ராஜினாமா

மாஜி முதல்வர் ராஜினாமா

மற்றொரு முன்னாள் முதல்வரான லஷ்மிகாந்த் பர்சேகருக்கும் சீட் தர மறுத்தது பாஜக மேலிடம். இதனால் பர்சேகரும் பாஜகவில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார். இதேபோல் பொதுப்பணித்துறை அமைச்சர் தீபக் பாஸ்கர், துணை சபாநாயகர் இசிடோர் பெர்னாண்டஸ் ஆகியோரும் பாஜகவை விட்டு வெளியேறி உள்ளனர். துணை முதல்வர் சந்திரகாந்த் கவேல்கரின் மனைவி சாவித்ரி கவேல்கரும் பாஜகவில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இவர்களில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த தீபக் பாஸ்கர், மகாராஷ்டிரவாதி கோமந்த் கட்சியில் இருந்து 2019-ல் பாஜகவில் இணைந்தவர். இனி தாம் கோமந்த் கட்சிக்கோ, பாஜகவுக்கோ திரும்பப் போவது இல்லை என தீபக் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

தொடரும் விலகல்

தொடரும் விலகல்

2017 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக வென்றவர் துணை சபாநாயகர் இசிடோர் பெர்னாண்டஸ். 2019-ல் இவரும் பாஜகவில் இணைந்தார். என்னுடைய ஆதரவாளர்கள் விரும்பினால் நான் சுயேட்சையாக போட்டியிடத் தயார் என அவர் கூறியுள்ளார். இப்படி பாஜகவில் இருந்து மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து விலகி இருப்பது தேர்தல் களத்தில் கடும் சவால்களை அக்கட்சிக்கு கொடுக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

English summary
According to the media reporst, Goa BJP faces setback after the leaders resign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X