ப.சிதம்பரம் சார் ரொம்ப கதறாதீங்க... கோவா தேர்தல் விமர்சனத்துக்கு கெஜ்ரிவால் பதிலடி
பனாஜி: கோவா சட்டசபை தேர்தலில் பாஜக அல்லாத வாக்குகளை ஆம் ஆத்மி கட்சி, திரிணாமுல் பிரிக்கிறது என காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் ப.சிதம்பரம் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி தந்துள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், ப.சிதம்பரம் ரொம்பவும் கதறாதீங்க.. கோவா மக்கள் மீது நம்பிக்கை வையுங்க என கூறியுள்ளார்.
கோவா சட்டசபைத் தேர்தல் பிப்ரவரி 14-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த வாக்குகள் மார்ச் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
கோவாவில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்க பகீரத முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. 2017 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள், பாஜகவில் இணைந்துவிட்டனர். இதனால் காங்கிரஸ் கட்சி மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது.

கருத்து கணிப்புகள்
எஞ்சியிருந்த காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகளையும் திரிணாமுல் காங்கிரஸ் இழுத்துக் கொண்டிருக்கிறது. தற்போதைய நிலையில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும்; ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கட்சியாக அதிக இடங்களில் வெல்லும் என்கின்றன கருத்து கணிப்புகள்.

உருவாகுமா மெகா அணி?
இதனிடையே மகாராஷ்டிராவைப் போல மெகா கூட்டணி அமைக்க திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை தரப்பில் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஒன்னமும் ஒர்க் அவுட் ஆகவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை காங்கிரஸ் மேலிடப் பார்வையாளரும் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் இன்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

ப.சிதம்பரம் விமர்சனம்
ப.சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில், கோவாவில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். கோவாவில் பாஜக- காங்கிரஸ் இடையேதான் போட்டி. ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆகியவை பாஜக அல்லாத வாக்குகளை பிரிக்கின்றன. ஆட்சி மாற்றம் வேண்டும் எனில் கோவா மக்கள், காங்கிரஸுக்குதான் வாக்களிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

கெஜ்ரிவால் பதிலடி
இதற்கு பதிலளித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், ப.சிதம்பரம் கதறி அழுவதை நிறுத்த வேண்டும். பாஜக மீதான அதிருப்தியால் வெல்வோம் என அதாவது பாஜக மீது நம்பிக்கை வைத்திருக்கிறது காங்கிரஸ். பாஜக மீது நம்பிக்கை வைக்காமல் கோவா மக்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் 17 எம்.எல்.ஏக்களில் 15 பேர் பாஜகவில்தான் உள்ளனர் என கூறியுள்ளார்.
-
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications