கூகுளுக்கு ரூ. 136 கோடி அபராதம் விதித்த இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கூகுள் நிறுவனத்திற்கு ரூ. 136 கோடி அபராதம்- வீடியோ

  டெல்லி: இந்திய சந்தையில் ஆன்லைன் தேடலில் பாரபட்சமாக செயல்பட்டதாகக் கூறி கூகுள் நிறுவனத்திற்கு ரூ. 136 கோடி அபராதம் விதித்து இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

  கூகுள் நிறுவனம் இந்தியாவில் ஆன்லைன் தேடலில் பாரபட்சமாக நடந்து கொள்வதாக பிரபல திருமண சேவை இணையதளம் இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையத்தில் புகார் அளித்தது.

  Google fined Rs. 136 crore for search bias in India

  இந்த புகாரை விசாரித்த ஆணையம் கூகுள் நிறுவனம் பாரபட்சமாக செயல்படுவதை உறுதி செய்தது. இதையடுத்து 190 பக்கங்கள் கொண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம்.பாரபட்சமாக நடந்து கொண்ட கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விதித்துள்ளது ஆணையம்.

  கூகுள் நிறுவனம் பாரபட்சமாக நடந்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செயல் மூலம் அந்நிறுவனம் தனது போட்டியாளர்கள் மற்றும் பயனாளிகளுக்கு தீங்கு விளைவித்துள்ளது என்று ஆணையம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  இந்நிலையில் பயனாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்று கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The Competition Commission of India (CCI) has imposed Rs. 136 crore fine on major search engine Google for indulging in practices of search bias in the Indian market.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற