For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீர்.. ஸ்ரீநகரில் முதல்முறையாக கம்பீரமாக பறக்கும் தேசியக் கொடி!

Google Oneindia Tamil News

Recommended Video

    சுதந்திரம் போற்றுவோம்..! சுதந்திரத்தை காப்போம்..!

    ஸ்ரீநகர்: யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்யும் சட்டம் 370 1949-இல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இது நேரு பிரதமராக இருந்த போது கொண்டு வரப்பட்டது. மேலும் சிம்லா ஒப்பந்தப்படி காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியா, பாகிஸ்தான் இடையே பேசி தீர்த்து கொள்ள வேண்டும் என போடப்பட்டுள்ளது.

    370 சட்டப்பிரிவால் ஜம்மு காஷ்மீருக்கு தனிக்கொடி இருந்து வந்தது. இந்தக் கொடியானது 1931-ஆம் ஆண்டு முதல் ஜம்மு காஷ்மீரில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டோக்ரா ஆட்சியாளர்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.

    'சுதந்திரம் குறித்து எனது யோசனை'.. பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தையை கவனிச்சீங்களா 'சுதந்திரம் குறித்து எனது யோசனை'.. பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தையை கவனிச்சீங்களா

    ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீர்

    இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவரது சட்டையில் படிந்த ரத்தக் கறை காஷ்மீரின் கொடியாக ஏற்றப்பட்டது. மேலும் ஜூலை 13-ஆம் தேதி தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் ஜம்மு காஷ்மீருக்கு விடுமுறை தினமாகும்.

    சட்டசபை

    சட்டசபை

    பின்னர் ஜூலை 1939-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி என்ற அரசியல் கட்சி இந்த கொடியை ஏற்றுக் கொண்டது. இதையடுத்து இந்த கொடியே ஜம்மு காஷ்மீரின் கொடி என 1952-இல் சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    3 பகுதிகள்

    3 பகுதிகள்

    144 சட்டப்பிரிவின்படி கொடியானது செவ்வக வடிவில் 3:2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். இதன் நிறம் சிவப்பாகும். முதலில் சுட்டுக் கொல்லப்பட்ட தியாகிகளின் ரத்தத்தை குறித்தாலும் பின்னாளில் தொழிலாளர்களை குறித்தது. இந்த கொடியின் நடுவே வெள்ளை நிறத்தில் கலப்பை இருக்கும். இது விவசாயிகளை குறிக்கும். இது போல் வெள்ளை நிறத்தில் 3 கோடுகள் இருக்கும். அவை ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் ஆகிய பகுதிகளை குறிக்கும்.

    தனிச் சட்டம்

    தனிச் சட்டம்

    இத்தனை நாட்கள் தனிக்கொடி, தனி சட்டம் என இருந்து வந்த ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாடாளுமன்றத்தில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தும்.

    சுதந்திர தினம்

    சுதந்திர தினம்

    இனி ஜம்மு காஷ்மீருக்கு தனிக் கொடி இல்லை என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 370 சட்டப்பிரிவுக்கு பின்னர் முதல்முறையாக ஜம்மு காஷ்மீரில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

    ஜம்மு காஷ்மீரில் தனிக் கொடி

    ஜம்மு காஷ்மீரில் தனிக் கொடி

    இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் ஷேர் இ காஷ்மீர் ஸ்டேடியத்தில் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். மிகவும் பதற்றமான பூமியான ஜம்மு காஷ்மீரில் தனிக் கொடி பறந்து வந்த நிலையில் முதல்முறையாக தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது.

    English summary
    Governor Satya Paul Malik hoisted National Flag in Kashmir after revoking of Article 370.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X