For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆண்டுதோறும் "நிலம்" கையகப்படுத்துவதற்காகவே பல்லாயிரம் கோடியை செலவிடும் அரசு!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நமது அரசாங்கம் ஆண்டுதோறும் நிலம் கையகப்படுத்துதவதற்காகவே பல்லாயிரம் கோடி ரூபாயை செலவிடுகிறது என்கிறது ஒரு புள்ளி விவரம்.

அரசின் பெயரில் நிலம், வீடுகள், அலுவலக கட்டிடங்கள் என மொத்தம் ரூ2 லட்சத்து 15 ஆயிரத்து 975 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பகுதி நிலம்தானாம்.

Govt spent over Rs 7800 crore on land and building

கடந்த 2012-13ஆம் ஆண்டு அரசு செய்த செலவினத்தின் பட்டியல் இது.. மொத்தம் ரூ7800 கோடியை நிலம் கையகப்படுத்துதல் மற்றும் குடியிருப்பு கட்டுமானங்களுக்கு மட்டுமே செலவு செய்துள்ளது அரசு.

ரூ4,184.9 கோடி மதிப்பிலான நிலம் 2012-13 ஆம் ஆண்டு காலத்தில் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் குடியிருப்புகள் கட்டுமானத்துக்கு அந்த ஆண்டில் ரூ2693.37 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இயந்திரங்கள், உபகரணங்கள் வாங்கிய வகையில் ரூ1,357.81 கோடி செலவாகியிருக்கிறது.

அலுவலக கட்டுமானங்கள் கட்டியதில் ரூ1,011.39 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அலுவலக உபகரணங்கள் வாங்கியது என்கிற வகையில் 234.62 கோடி செலவாகியுள்ளது.

அரசு வாகனங்கள் வாங்கியதற்கு ரூ 231.8 கோடி, இதர திட்ட செலவினங்களுக்கு ரூ113.69 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாம்..

English summary
Three-fourths of the Rs215,975 crore of physical assets the government owns is in the form of land, residential or office buildings. And its spending on physical assets in 2012-13 suggests the state would like to maintain that ratio, and become bigger in the process. Minimum government, maximum governance might be the Modi government’s stated principle. But at least as yet, the government is not getting smaller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X