For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரச்சார கூட்டத்தில் மயங்கி விழுந்த குஜராத் முதல்வர்... பதறிடியத்தபடி கால் செய்த பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

காந்தி நகர்: குஜராத்தில் பிரச்சார கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கால் செய்து பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 21 மற்றும் 28ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

குஜராத்தின் வதோதராவின் நிஜம்புரா பகுதியின் இன்று விஜய் ரூபானி பிரச்சாரம் செய்தார். அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் அவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் அவர் மயங்கி விழுந்தார். நல்ல வேலையாக அவர் கீழே விழுவதற்குள் அருகிலிருந்த காவலர்கள் அவரை தாங்கி பிடித்தனர்.

Gujarat CM Vijay Rupani faints during rally, PM calls to check on him

இதையடுத்து மேடையிலேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவர் விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டார். உடனடியாக அகமதாபாத் செல்லும் விஜய் ரூபானி, அங்கு மருத்துவனிற்குச் செல்வார் என்று பாஜகவினர் தெரிவித்துள்ளனர்

குஜராத் முதல்வர் பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்த செய்தியை அறிந்ததும், பிரமதர் நரேந்திர மோடி விஜய் ரூபானியை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். தற்போது விஜய் ரூபானியின் உடல்நிலை நலமாக உள்ளதாகவும் சில நாட்கள் அவர் கட்டாயம் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாஜகவைச் சேர்ந்த பாரத் டேஞ்சர் கூறுகையில், "கடந்த இரண்டு நாட்களாக ரூபானியின் உடல்நிலை சரியில்லை. பிரச்சார கூட்டங்களை ரத்து செய்யுமாறு மருத்துவர்கள் வலியுறுத்தினார்கள். இருப்பினும், அதைக் கேட்காமல் தொடர்ந்து அவர் பிரச்சார கூட்டங்களில் கலந்துகொண்டார். அவருக்கு தற்போது ஓய்வு தேவைப்படுகிறது. அவ்வளவுதான், மற்றபடி நலமாக உள்ளார்" என்றார்

English summary
Gujarat chief minister Vijay Rupani fainted on stage while addressing a rally on Sunday, his third for the day, ahead of the upcoming civic polls in Nizampura area of Vadodara.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X