For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடேங்கப்பா இப்படி ஒரு சாதனையா.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியம்!

Google Oneindia Tamil News

அகமதாபாத்: அதிக ரசிகர்கள் மைதானத்தில் வந்ததற்காக குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதை சாத்தியமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக பிசிசிஐ செயலர் ஜெய்ஷா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

குஜரத்தின் அகமதாபாத்தில் உள்ள மோதிரா பகுதியில் கிரிக்கெட் ஸ்டேடியம் ஒன்று உள்ளது.

பிரதமர் மோடியின் பெயரில் வைக்கப்பட்டு இருக்கும் இந்த ஸ்டேடியம் தான் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகும்.

ஜி20 நாடுகள் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்பது பெருமிதம் வாய்ந்தது.. பிரதமர் மோடி நெகிழ்ச்சி ஜி20 நாடுகள் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்பது பெருமிதம் வாய்ந்தது.. பிரதமர் மோடி நெகிழ்ச்சி

 நரேந்திர மோடி ஸ்டேடியம்

நரேந்திர மோடி ஸ்டேடியம்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதாதனத்தை விட பெரிய மைதானமாக இது உள்ளது. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஒரே நேரத்தில் , 1,10,000 - பேர் அமர்ந்து போட்டியைக் காண முடியும். சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் இந்த மைதானம் அமைந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த ஸ்டேடியத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

ஐபில் இறுதிப்போட்டி

ஐபில் இறுதிப்போட்டி

அதன்பிறகு இந்த மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஐபிஎல் போட்டிகளும் இந்த மைதானத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டிக் கூட இந்த மைதானத்தில் தான் நடைபெற்றது. குஜராத் டைடன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிய இந்த ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் திரண்டனர். லைவ் போட்டியின் போதே கிரிக்கெட் ரசிகர்கள் இதை பார்த்து இருக்கக் கூடும்.

ஜெய்ஷா ட்விட்டர்

ஜெய்ஷா ட்விட்டர்

இந்த நிலையில், அதிகபட்ச ரசிகர்கள் கலந்து கொண்டதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் நரேந்திர மோடி ஸ்டேடியம் இடம் பிடித்துள்ளது. பிசிசிஐ செயலர் ஜெய்ஷா இந்த தகவலை பகிர்ந்துள்ளார். ஜெய்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கின்னஸ் சாதனையை அங்கீகரித்து வழங்கப்படும் சான்றிதழை கையில் வைத்தபடி நிற்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு இருக்கிறார். ஜெய்ஷா தனது ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:-

கின்னஸ் சாதனையாக அங்கீகரிப்பு

கின்னஸ் சாதனையாக அங்கீகரிப்பு

"மே 29 ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 1,01,566 ரசிகர்கள் மைதானத்திற்குள் திரண்டனர். இது கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழை பெறுவது மகிழ்ச்சியும் பெருமையும் தருகிறது" என்று பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் அதிகபட்சமாக 1,00,024- ரசிகர்கள் போட்டியை காணும் வசதியக் கொண்டதாகும்.

 50 ஓவர் உலக கோப்பை போட்டி

50 ஓவர் உலக கோப்பை போட்டி

அடுத்த ஆண்டு இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதன் இறுதி ஆட்டமும் இந்த மைதானத்தில் நடைபெறலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உலக கோப்பை இறுதி ஆட்டம் இங்கு நடைபெற்றால், இந்த மைதானம் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு நிகராக ரசிகர்கள் போட்டியை பார்க்க கூடுவார்கள் என்று தெரிகிறது.

English summary
The Narendra Modi Stadium in Gujarat holds a Guinness World Record for the highest number of fans at the stadium. BCCI Secretary Jaisha took to Twitter to thank the fans for making this possible.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X