For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஞானவாபி மசூதியில் சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரும் வழக்கு: இன்று வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பு!

Google Oneindia Tamil News

வாரணாசி: உத்தரப்பிரதேசத்தின் ஞானவாபி மசூதியில் சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரும் வழக்கில் வாரணாசி நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) தீர்ப்பளிக்க உள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் ஆன்மீக அடையாளங்களில் மிக முக்கியமான இடம் காசி. இந்துக்களின் புனித யாத்திரை தலங்களில் காசியும் மிக முக்கியமான முதன்மையான இடம்.

இந்தியாவுக்குள் எல்லை தாண்டிய ஊடுருவிய 11 இலங்கை மீனவர்கள் ஆந்திராவில் கைது- கோர்ட்டில் ஆஜர்! இந்தியாவுக்குள் எல்லை தாண்டிய ஊடுருவிய 11 இலங்கை மீனவர்கள் ஆந்திராவில் கைது- கோர்ட்டில் ஆஜர்!

காசி கோவில்

காசி கோவில்

காசியில் புகழ்பெற்ற விஸ்வநாதர் ஆலயத்தில் தரிசனம் செய்ய ஒவ்வொரு நாளும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் சிந்த தொகுதி காசி. இங்கு காசி விஸ்வநாதர் ஆலயத்தை சுற்றி ஏராளமான மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

ஞானவாபி மசூதி

ஞானவாபி மசூதி

அதேநேரத்தில் பல சர்ச்சைகளின் மையமாகவும் காசி விஸ்வநாதர் ஆலயம் இருக்கிறது. இக்கோவில் அருகே முகலாய பேரரசர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்ட ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. காசி கோவில் அருகே மசூதி இருந்தாலும் எந்தவித மோதலும் இதுவரை இருந்தது இல்லை.
இந்து நம்பிக்கையாளர்கள், ஞானவாபி மசூதியே கோவில் மீது கட்டப்பட்டது; அதன் வெளிப்புறத்தில் அம்மன் சிலையை வழிபட அனுமதி வேண்டும் என்றனர். இது தொடர்பாக 5 பெண்கள் வழக்கும் தொடர்ந்தனர். இது நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளானது.

சிவலிங்கம் கண்டெடுப்பு

சிவலிங்கம் கண்டெடுப்பு

இவ்வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்ற உத்தரவின் படி, ஞானவாபி மசூதிக்குள் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இன்னொரு பக்கம், அஞ்சுமன் இந்தஜாமியா என்ற முஸ்லிம் அமைப்பு இவ்வழக்கில் இணைந்து கொண்டது. இவ்வழக்கில் உச்சநீதிமன்றமும் தலையிட்டது.

வாரணாசி கோர்ட் தீர்ப்பு

வாரணாசி கோர்ட் தீர்ப்பு

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிவலிங்கம் இருந்த இடத்தை பாதுகாக்கலாம்; அதேநேரத்தில் மசூதியில் தொழுகையும் நடத்தலாம் என உத்தரவிட்டது. மேலும் இருதரப்பு வாதங்களை கேட்ட வாரணாசி நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தின் தலையிட்டால் தமது தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில் இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

English summary
Vanaranasi court will deliver its verdict in Gyanvapi mosque case today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X