அனுமான் ஒரு தலித்.. ஆகவே தலித் மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும்.. ஆதித்யநாத் பரபர!
அனுமான் ஒரு தலித், அதனால் தலித் மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் குறிப்பிட்டு இருக்கிறார்.
Recommended Video

ஜெய்ப்பூர்: அனுமான் ஒரு தலித், அதனால் தலித் மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்தியா முழுக்க ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. ராஜஸ்தானில் வரும் டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. ராஜஸ்தான் தேர்தலுக்காக பாஜக தற்போது தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.
இந்த நிலையில் ராஜஸ்தானில் சட்டமன்ற தேர்தலுக்காக உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஜாதி குறித்து பேசினார்
ராஜஸ்தானில் பிரச்சாரம் செய்வதற்காக யோகி ஆதித்யநாத் களமிறங்கி உள்ளார். அவர் செய்யும் பிரச்சாரத்தில் முழுக்க முழுக்க ராமர் குறித்து ராமாயணம் குறித்தும்தான் பேசி வருகிறார். எப்போதும் மதம் பற்றி பேசும் இவர் இந்த முறை ஜாதி குறித்து அதிகமாக பேசினார்.

நிறைவேற்ற வேண்டும்
அவர் தனது பிரச்சாரத்தில், அனுமான் ஒரு தலித். அவர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர். அவர் இந்தியா முழுக்க இணைந்து இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ராமரின் ஆசையும் அதுதான். தெற்கும் வடக்கும், மேற்கும் கிழக்கும் இணைந்து இருக்க ஆசைப்பட்டார். அதை நாம் நிறைவேற்ற வேண்டும். பாஜக அதை நிறைவேற்றும்.

வாக்களிப்பது கட்டாயம்
இதனால் தலித்துகள் கண்டிப்பாக பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும். பாஜகவின் ஆசையையும், ராமரின் ஆசையையும் நிறைவேற்ற பாஜகவிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். இந்த யுத்தத்தில் அனுமார் படைதான் வெல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

ராவணன் ஓட்டு
அதோடு நாங்கள் ராமர் படை, காங்கிரஸ் ராவண படை. ராமருக்கு வாக்களிக்க விரும்பினால் பாஜகவிற்கு வாக்களியுங்கள். ராவணன் வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார். எப்போதும் போல பாஜக எதை எதிர்பார்த்ததோ அதை போலவே யோகி ஆதித்யநாத் பேசி இருக்கிறார். அதேசமயம் ராஜஸ்தானில் இவர் பேச்சுக்கு வரவேற்பு கிடைத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications