திருமணத்திற்குத் தயாராகும் ஹர்பஜன் சிங்கும், கீதா பஸ்ராவும்..!
மும்பை: நடிகை கீதா பஸ்ராவும், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் திருமணத்திற்கு படு வேகமாக தயாராகி வருகிறார்கள். இவர்களது திருமண அழைப்பிதழ் வெளியாகியுள்ளது.
பிரபலங்களின் பிரமாண்டமான திருமண வரிசையில் இந்தத் திருமணமும் இடம்பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. இவர்களது திருமணம் அக்டோபர் 29ம் தேதி நடைபெறவுள்ளது.
நவம்பர் 1ம் தேதி இவர்களது திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது. அதற்கான அழைப்பிதழ் தற்போது ஆன்லைனில் வெளியாகியுள்ளது.
|
பொன்னிறத்தில்...
சிவப்பு மற்றும் பொன்னிறத்தில் உள்ள இந்தத் திருமண அழைப்பிதழ் அடிக்கப்பட்டுள்ளது. ஏடிசிங் என்பவர் இந்த திருமண அழைப்பிதழை வடிவமைத்துள்ளார். இதைப் புகைப்படம் எடுத்து டிவிட்டரிலும் அவர் போட்டுள்ளார்.

ஹோட்டலில் திருமணம்...
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகர்தான் ஹர்பஜனின் சொந்த ஊர். அங்கிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பக்வாராவில் உள்ள ஹோட்டல் கிளப் கபானாவில்தான் திருமணம் நடைபெறவுள்ளது.

5 நாட்கள்...
வழக்கமான சங்கீத், மெஹந்தி மற்றும் ரிசப்ஷனுடன் கூடியதாக இந்தத் திருமணம் நடைபெறவுள்ளது. 5 நாட்களுக்கு திருமணத்தை நடத்தவுள்ளனராம்.

டிசைனர் காக்ரா...
31 வயதாகும் கீதா பஸ்ரா, தனது திருமணத்தின்போது ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட டிசைனர் காக்ரா அணிந்து வரவுள்ளார். 35 வயதான ஹர்பஜன் சிங், ராகேவந்திரா ரத்தோர் உருவாக்கியுள்ள ஷெர்வானி அணிந்து திருமணத்தில் கலந்து கொள்கிறார்.

எல்லாத்துக்குமே காக்ரா தான்...
கீதா, அக்டோபர் 27ம் தேதி நடைபெறும் சங்கீத், 28ம் தேதி நடைபெறும் மெஹந்தி மற்றும் 29ம் தேதி நடைபெறும் திருமணம், நவம்பர் 1 ரிசப்ஷன் என அனைத்துக்குமே டிசைனர் காக்ரா அணிந்து அசத்தவுள்ளாராம்.

சிவப்பு நிறம்...
இவரது உடைகளை அர்ச்சனா கோச்சார் மற்றும் பபிதா மல்கானி ஆகியோர் வடிவமைத்துள்ளனர். சிவப்பு மற்றும் தங்க நிறத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாம்.

நடிகை...
நடிகையான கீதா, மிஸ்டர் ஜோ பி, கார்வால்ஹோ, பைய்யாஜி சூப்பர்ஹிட், தி டிரெயின் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக கடந்த ஜூலை மாதம் வெளியான செகன்ட் ஹேண்ட் ஹஸ்பன்ட் படத்தில் நடித்திருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications