For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுயேட்சைகளை வளைக்க திட்டம்.. ஹரியானாவில் ஆட்சியை பிடிக்க பாஜக முடிவு.. அமித் ஷா மாஸ்டர் பிளான்!

ஹரியானாவில் ஆட்சி அமைப்பதற்காக பாஜக கட்சி புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்து இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Haryana assembly elections result: Congress called their candidates

    சண்டிகர்: ஹரியானாவில் ஆட்சி அமைப்பதற்காக பாஜக கட்சி புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்து இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

    ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இரண்டு மாநில சட்டசபை தேர்தல் மற்றும் 51 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது.

    ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது, காங்கிரஸ் 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆச்சர்யமாக ஜனநாயக் ஜனதா கட்சி 10 இடங்களில் வென்றது. அதேபோல் சுயேட்சைகள் 7 இடங்களில் வென்றனர். ஹரியானாவில் ஆட்சி அமைக்க 46 இடங்களில்

    இடைத்தேர்தல் முடிவு.. கருணாநிதி நினைவிடத்திற்கு நேற்று இரவு சென்ற ஸ்டாலின்.. மலர் தூவி மரியாதை!இடைத்தேர்தல் முடிவு.. கருணாநிதி நினைவிடத்திற்கு நேற்று இரவு சென்ற ஸ்டாலின்.. மலர் தூவி மரியாதை!

    தொங்கு சட்டசபை

    தொங்கு சட்டசபை

    அங்கு தொங்குசட்டசபை உருவாகி உள்ளது. இந்த நிலையில் ஹரியானாவில் ஆட்சி அமைப்பதற்காக பாஜக வேறு ஒரு திட்டத்தை கையில் எடுத்துள்ளது. முதலில் ஹரியானா பாஜக முதல்வர் எம்எல் கட்டாரை அனுப்பி ஆட்சி அமைக்க உரிமை கோர முடிவு செய்துள்ளது. அதன்பின் பொறுமையாக பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்டு இருக்கிறது.

    மெஜாரிட்டி பெற முடிவு

    மெஜாரிட்டி பெற முடிவு

    ஹரியானாவில் மெஜாரிட்டி பெற பாஜகவிற்கு இன்னும் 6 இடங்கள் தேவை. அதனால் ஜேஜேபி கட்சியை நம்பி இருக்காமல், சுயேட்சைகளை வளைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. நேற்றே ஹரியானாவில் எச்எல்பி கட்சி சேர்ந்த எம்எல்ஏ அமித் ஷாவை சந்தித்து ஆதரவு தருவதாக கூறியுள்ளார். எச்எல்பி கட்சி ஹரியானாவில் ஒரு இடத்தில் வென்றது.

    இன்னும் தேவை

    இன்னும் தேவை

    இதனால் அங்கு ஆட்சி அமைக்க 5 எம்எல்ஏக்கள் மட்டுமே பாஜகவிற்கு தேவை. அங்கு மொத்தம் 7 இடங்களில் சுயேட்சைகள் வெற்றிபெற்றுள்ளனர். இதில் 5 பேரை எப்படியாவது வளைக்கலாம் என்று பாஜக திட்டமிட்டுள்ளது. 2 பேர் இதில் ஏற்கனவே டெல்லிக்கு பாஜக தலைவர்களை சந்திக்க பறந்து விட்டனராம்.

    ஆட்சி அமைக்கும்

    ஆட்சி அமைக்கும்

    அங்கு ஜேஜேபி கட்சி 10 இடங்களில் வெற்றிபெற்று இருந்தாலும் முதல்வர் பதவி வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா கேட்டு வருகிறார். அதனால் பாஜக அவரை அணுகாமல், சுயேட்சைகளின் ஆதரவை வைத்து மட்டுமே ஆட்சி அமைக்கும். இன்று மாலையே இதற்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

    English summary
    Haryana assembly elections result: BJP plans to go for Independent as JJP seeking CM post in the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X