For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாய் கறிக்கு நாகாலாந்து அரசு விதித்த தடைக்கு இடைக்காலத் தடை விதித்த கவுஹாத்தி உயர்நீதிமன்றம்

Google Oneindia Tamil News

கவுஹாத்தி: நாய் கறிக்கு நாகாலாந்து அரசு தடைவித்த நிலையில் அதற்கு கவுஹாத்தி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

வடகிழக்கு இந்தியாவின் நாகாலாந்தில் நாய்களின் இறைச்சியை உண்பதற்கும் விற்பதற்கும் தடை விதிக்கப்பட வேண்டும் என பல காலமாக விலங்குகள் நல அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

HC stay for Nagaland Governments ban on dog mat

இந்த நிலையில் நாகாலாந்து அரசு நாய் கறியை விற்பதற்கும் இறக்குமதி செய்வதற்கும் தடை விதித்தது. இதுகுறித்து கடந்த ஜூலை மாதம் வெளியான ட்விட்டரில் சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத வர்த்தக ரீதியில் நாய் கறியை இறைச்சி செய்வதற்கும் , அவற்றை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதை அந்த மாநில தலைமை செயலாளர் தேம்ஜன் டாய் தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை 201 சட்டம்தான் காரணம் என அரசு தெரிவித்திருந்தது.

நாகலாந்தில் நாய் இறைச்சி விற்கலாம்.. தடையை விலக்கி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுநாகலாந்தில் நாய் இறைச்சி விற்கலாம்.. தடையை விலக்கி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இதற்கு அந்த மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது நாய் கறி மீதான தடையானது மாநிலத்தின் பாரம்பரிய கலாசாரத்திற்கு எதிரானது என மாநிலத்தில் மக்கள் போராட்டம் நடத்தினர். மேலும் இதில் மருத்துவ தன்மையும் இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.

இதையடுத்து அரசின் உத்தரவை எதிர்த்து கவுகாத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது நாகாலாந்து அரசின் தடைக்கு இடைக்காலத் தடை விதிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதன் அடுத்த கட்ட விசாரணை குளிர்கால விடுமுறைக்கு பிறகு தொடங்கும்.

English summary
Gauhati Highcourt stays Nagaland Government Government's ban on Dog meat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X