பாஜகவை புறம் தள்ளி காங். ஆதரவை ஏற்ற மஜத.. ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் குமாரசாமி அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஆட்சியமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா

  பெங்களூர்: காங்கிரசின் ஆதரவை ஏற்றுவிட்டதாக மஜத மாநில தலைவர் குமாரசாமி, ஆளுநர் வஜுபாய் வாலாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  மஜதவை ஈர்க்க பாஜக தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், காங்கிரஸ் ஆதரவை தாங்கள் ஏற்றுவிட்டதாக குமாரசாமி கூறிவிட்டார். மிக வேகமாக கர்நாடக அரசியல் களம் முன் நகர்வதன் அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது.

  HD Kumaraswamy waves hand to party workers

  மேலும் மாலை 5.30 மணி முதல் 6 மணிக்குள் உங்களை சந்திக்க விரும்புகிறேன் என்றும் குமாரசாமி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

  பெங்களூர் பத்மநாபநகரிலுள்ள மஜத தேசிய தலைவர் தேவகவுடா வீடு இன்று பிற்பகல் முதல், ஆட்சி அதிகாரத்தின் மையமாக மாறிவிட்டது. கிங் மேக்கராக மஜத மாறிவிட்டதால் தேவகவுடா வீட்டுக்கு எதிரே மஜத தொண்டர்கள் குவிந்தனர்.

  மஜத மாநில தலைவரும், தேவகவுடா மகனுமான குமாரசாமியும், தேவகவுடா வீட்டுக்கு வந்தார். தீவிர ஆலோசனை உள்ளே நடந்தபோதே, வெளியே தொண்டர்கள் குமாரசாமிதான் அடுத்த முதல்வர் என கூறி கோஷமிட்டனர்.

  சுமார் 4 மணியளவில் வீட்டு மாடி, போர்டிகோ பகுதிக்கு வந்து, தொண்டர்களை பார்த்து மகிழ்ச்சியாக கையசைத்தார் குமாரசாமி. அவர்களை பார்த்து கும்பிட்டுவிட்டு வீட்டுக்குள் சென்றார்.

  குமாரசாமி நடவடிக்கையை பார்த்ததும், காங்கிரசுடன் மஜத கூட்டணி முடிவாகிவிட்டதாக தொண்டர்கள் கரகோஷம் எழுப்பினர். 38 தொகுதிகளில் மட்டுமே வென்றாலும், மஜத இப்போது கிங்காக மாறியுள்ளது. கவனிக்கவும், கிங் மேக்கர் அல்ல. மஜததான் இப்போது கிங். ஏனெனில், மஜத ஆட்சியமைக்க நாங்கள் ஆதரவு அளிக்க தயார் என அறிவித்துள்ளது காங்கிரஸ்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  JD(S)'s HD Kumaraswamy at HD Deve Gowda's residence in Bengaluru.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற