ஜார்கண்ட் முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்! ராகுல், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றுக்கொண்டார். ராஞ்சியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். இந்த விழாவில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சரத்பவார் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழக துணை முதல்வர் உதயநிதியும் ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
ஜார்க்கண்டில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 13 மற்றும் 20 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சி வெற்றி பெற்றது. ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்து இருந்த பாஜகவுக்கு ஏமாற்றமே கிடைத்தது. இந்தியா கூட்டணி 56 இடங்களிலும் பாஜக கூட்டணி 24 இடங்களிலும் வெற்றி பெற்றது.

இந்தியா கூட்டணி வெற்றி: ஜார்க்கண்ட் முக்தி மோர்சா 34 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இந்தியா கூட்டணிக்கு கிடைத்ததையடுத்து ஹேமந்த் சோரன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததையடுத்து இன்று ஜார்கண்ட் முதல்வராக பதவியேற்றுள்ளார்.
4வது முறையாக முதல்வர்: ஜார்க்கண்ட் ஆளுநர் சந்தோஷ்குமார் கங்வார் அவருக்கு பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்பது இது 4-வது முறையாகும். இன்று ஹேமந்த் சோரன் மட்டுமே பதவியேற்றுள்ளார். அவரது அமைச்சரவையில் இடம் பெற போகிறவர்களின் பட்டியல் இன்னும் வழங்கப்படவில்லை.
கேபினர் விரிவாக்கம் எப்போது?: அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் என்பது தொடர்பாக என்ற பேச்சுவார்த்தை காங்கிரஸ் கட்சிக்கும் ஹேமந்த் சோரன் கட்சிக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இதனால், அடுத்த வாரம் கேபினட் விரிவாக்கம் செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. அதற்கு முன்பாக நம்பிக்கை வாக்கெடுப்பும் அவையில் நடைபெற உள்ளது.
ஹேமந்த் சோரன் கேபினட்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த 6 ஏம்.எல்.ஏக்களுக்கும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 பேருக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ஒருவருக்கும் இடம் ஒதுக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள மோர்ஹபதி மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு: இந்த பதவியேற்பு விழாவில், இந்தியாகூட்டணி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கட்சியின் முக்கிய தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேகலயா முதல்வர் கொன்ராட் சர்மா, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதேபோல் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்றுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications