இமாச்சலில் வெற்றிக்கனியை ருசித்த பாஜக - ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ்
இமாசல பிரதேசத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது காங்கிரஸ் கட்சி.
Recommended Video

சிம்லா: இமாசல பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. பாஜக வெற்றிவாகை சூடி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி பரிதாபமாக ஆட்சியை பறிகொடுத்துள்ளது.
காலையில் இருந்தே பாஜக, காங்கிரஸ் கட்சியிடையே கடும் போட்டி நிலவியது. ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை பிடிக்க பாஜகவும் கடுமையாக போராடின. 11 மணிக்கு மேல் பாஜகவின் பக்கமே வெற்றி என்பதை உறுதி செய்யும் வகையில் முன்னணி நிலவரங்கள் வெளியாகின.

68 தொகுதிகளைக் கொண்ட இமாசல பிரதேசத்தில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைக் கைப்பற்றி பாஜக ஆட்சியைப் பிடித்தது. பாஜகவிற்கு 38 இடங்கள் கிடைத்தன. ஆளும் காங்கிரஸ் கட்சி 19 இடங்களை மட்டுமே பிடித்தது.
இமாசல பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளதை அடுத்து அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பல மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலில் தொடர் தோல்வியை சந்தித்த காங்கிரஸ் கட்சி இமாசல பிரதேசத்தில் வெற்றியை தக்க வைக்க கடுமையாக போராடியது. இறுதியில் தோல்வியே பரிசாக கிடைத்தது.
தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்பதாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். குஜராத், இமாச்சலத்தில் அமையவுள்ள புதிய அரசுகளுக்கு ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications