கொடுமை.. பாகிஸ்தானில் இந்து பெண்.. மர்ம கும்பலால் தலை வெட்டி கொலை.. தோலை உரித்த கொடுமை!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மர்ம கும்பலால் தலையையும், மார்பகங்களையும் துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அந்தப் பெண்ணின் தலையை துண்டிப்பதற்கு முன்பாக அவரது உடல் முழுவதும் தோலை உரித்து சித்ரவதை செய்து அந்த கும்பல் கொலை செய்திருக்கிறது.
பாகிஸ்தானில் தொடர்ந்து இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் கொலை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் அங்குள்ள சிறுபான்மை மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்து பெண்களை குறிவைத்து..
முஸ்லிம் நாடான பாகிஸ்தானில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியவர்கள் ஆகியோர் சிறுபான்மையினராக இருக்கின்றனர். இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாவே பாகிஸ்தானில் சிறுபான்மையின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்து மதத்தைச் சேர்ந்த பெண்களை குறிவைத்து கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாகவும், மறுப்பவர்கள் கொலை செய்யப்பட்டும் வருகின்றனர். இவ்வாறு கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ஆயிரக்கணக்கான இந்து பெண்கள் கொலை செய்யப்பட்டிருப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் மாதம் கூட 17 வயது இந்து சிறுமி பட்டப்பகலில் நடுத்தெருவில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் அந்நாட்டில் நடந்திருக்கிறது.

கொடூரக் கொலை
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சிஞ்சோரோ நகரைச் சேர்ந்தவர் தயா பேல் (40). இந்து மதத்தைச் சேர்ந்த இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை இழந்துவிட்டார். 4 குழந்தைகளுடன் அவர் தனியார் வாழ்ந்து வந்திருக்கிறார். இதனிடையே, கடந்த திங்கள்கிழமை தயா பேல் திடீரென காணாமல் போனார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், ஊர் எல்லையில் உள்ள ஒரு வயல்வெளியில் தயா பேலின் உடலை போலீஸார் கடந்த புதன்கிழமை கண்டறிந்தனர். அவரது தலை துண்டிக்கப்பட்டும், மார்பகங்கள் வெட்டி எடுக்கப்பட்ட நிலையில் அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடல் முழுவதும் தோல்களும் உரிக்கப்பட்டிருந்தன.

தோலை உரித்து சித்ரவதை
இந்த சூழலில், அவரது பிரேதப்பரிசோதனை அறிக்கை இன்று வெளியானது. அதில், தயா பேலின் தலை துண்டிக்கப்படுவதற்கு முன்பாக, அவர் உயிருடன் இருக்கும் போதே, கொலையாளிகள் அவரது உடல் முழுவதும் உள்ள தோலை அப்படியே உரித்து எடுத்திருக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு சித்ரவதை செய்து கொலை செய்யும் அளவுக்கு தயா பேலுக்கு எதிரிகள் யாரும் இல்லை என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த கொடூரக் கொலை சம்பவம் பாகிஸ்தானில் சிறுபான்மை மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.

4 ஆண்டுகளில் 3,571 பெண்கள்..
கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடப்பாண்டு ஜனவரி வரையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மட்டுமே 36 மாவட்டங்களில் இந்து மதத்தைச் சேர்ந்த 40,585 பெண்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 3,571 சிறுமிகள் மற்றும் பெண்கள் கடத்தப்பட்டு, அவர்களை இன்னும் கண்டறிய முடியவில்லை. அவர்களின் கதி என்ன என்பது கூட தெரியவில்லை. அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற குற்றங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மற்றொரு அதிர்ச்சி தரும் சம்பவம் பாகிஸ்தானில் தற்போது அரங்கேறியிருக்கிறது.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications