For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கறுப்புப் பணத்தை எப்படி வெள்ளையாக மாற்றுவது.. கூகுளில் அதிகம் தேடும் இந்தியர்கள்

கறுப்புப் பணத்தை எப்படி வெள்ளையாக மாற்றுவது என்று கடந்த 8ம் தேதியில் இருந்து கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடி வருகின்றனர்.

Google Oneindia Tamil News

டெல்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து, கூகுள் இணையதளத்தில் கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவது எப்படி என அதிகம் பேர் தேடியுள்ளனர்.

கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி 8ம் தேதி திடீரென அறிவித்தார். இதனால் ஏழை, எளிய மக்கள், சிறு மற்றும் குறு வியாபாரிகள் பெரிய அளவில் இன்று வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

How to convert black money: most people searched on Google

ஆனால், பணத்தை கணக்கில் காட்டாமல் பதுக்கி வைத்திருப்பவர்கள் தாங்கள் வைத்திருக்கும் பணத்தை எப்படி வெள்ளையாக மாற்றுவது என்ற கலக்கதிற்கு ஆளானார்கள். திடுதிப்பென மத்திய அரசு அறிவித்ததால் தாங்கள் வைத்திருக்கும் கறுப்பு பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் கூகுளில் போய் கறுப்பு பணத்தை எப்படி வெள்ளையாக மாற்றுவது என்று தேடி இருக்கிறார்கள் நமதருமை இந்தியர்கள்.

8ம் தேதியில் இருந்து மிக அதிகளவில் தேடப்பட்ட விஷயம் இதுதான் என்று கூகுள் தெரிவித்துள்ளது. கூகுள் தகவல்படி, இப்படி அதிகமாக தேடிய பட்டியலில் அரியானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. பாஜக ஆட்சியில் உள்ள மாநிலமும் பிரதமர் மோடியின் சொந்த ஊருமான குஜராத் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் மகாராஷ்டிரா, டில்லி மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

மேலும், மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டு குறித்தும் அறிமுகப்படுத்தப்பட உள்ள 500 ரூபாய் நோட்டு குறித்தும் அதன் புதிய அம்சங்கள் குறித்தும் இந்தியர்கள் கூகுளில் தேடியுள்ளனர்.

English summary
Most of the Indian people searched Google india “How to convert black money to white” after declaration of demonetization on Nov. 8th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X