அச்சுறுத்தும் அமெரிக்க வரி.. தப்பிக்க இருக்கும் வாய்ப்புகள் என்ன? இதை செய்தால் டிரம்பை சமாளிக்கலாம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவுக்கு 25% வரியை போட்ட டிரம்ப், தற்போது மேலும் கூடுதலாக 25% போட்டு மொத்தம் 50% வரியை விதித்திருக்கிறார். இதனால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் பொருட்களின் விலை 50% அதிகரித்திருக்கிறது. இது இந்தியாவின் வர்த்தகத்தை பாதிக்கும் என்றாலும், இந்த பஞ்சாயத்தை சமாளித்துவிட முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் வரி ஏன் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது? இந்த வரி ஏன் உலக அளவில் பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்துகிறது? இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்பது குறித்து இந்த செய்தி விவரிக்கிறது.

US tariff Trump

அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல்

அமெரிக்கா ராணுவ ரீதியில் பலமானதாக இருந்தாலும், பொருளாதார ரீதியில் அமெரிக்காவுக்கு பலம் அதன் கரன்சியான டாலர்தான். கச்சா எண்ணெய் வாங்கனுமா? தங்கம் வாங்கனுமா? விமானம் வாங்கனுமா? ஆயுதம் வாஙகனுமா? விண்வெளி தொழில்நுட்பத்தை வாங்கனுமா? எல்லாமே இங்கு டாலரில்தான் விற்பனை செய்யப்படுகிறது.

அப்படியெனில் இது எல்லாத்தையும் அமெரிக்காதான் விற்கிறதா? என்று கேட்டால் இல்லை. சவுதி எண்ணெய் விற்கிறது. அதன் கரன்சி 'சவுதி ரியால்' ஆகும். தங்கம் லண்டனில் ரேட் நிர்ணயிக்கப்படுகிறது. இதன் கரன்சி பவுண்டு ஸ்டெர்லிங். இப்படி பல சமாச்சாரங்களை வெவ்வேறு நாடுகள் விற்கின்றன. ஆனால் இவையெல்லாம் தங்கள் நாட்டின் கரன்சியில் விற்பனை செய்யாமல், அமெரிக்க டாலரில் விற்பனை செய்யப்படுவதுதான் இதில் உள்ள அரசியல்.

டாலர் ஆதிக்கம்

எனவே வெறுமென பச்சை கலரில் உள்ள டாலர்களை அச்சடிப்பதன் மூலம் மட்டுமே, அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவேதான் அமெரிக்க மற்ற நாடுகளுக்கு வரி விதிக்கும்போது அது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

இந்த புள்ளியை புரிந்துக்கொண்ட வளரும் நாடுகள், குறிப்பாக பிரிக்ஸ் நாடுகள், அதை உடைக்க முன் வந்திருக்கின்றன. சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்வதன் மூலம் இந்த புள்ளியை உடைக்க முடியும். இதை பிரிக்ஸ் நாடுகள் கச்சிதமாக செய்து வருகின்றன. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் என 10 நாடுகள் பிரிக்ஸில் உறுப்பினராக இருக்கின்றன.

பிரிக்ஸ் பலம்

இந்தியாவில் இரும்புத் தாது, நிலக்கரி, பாக்ஸைட், மாங்கனீஸ், விவசாயப் பொருட்கள்.
பிரேசிலில் இரும்புத் தாது, பாக்ஸைட், எரிசக்தி வளங்கள், விவசாயப்பொருட்களும்
ரஷ்யாவில் எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி, இரும்புத் தாது, தங்கம், வைரம், மற்றும் பல கனிமங்கள்
சீனாவில் நிலக்கரி, இரும்புத் தாது, பெட்ரோலியம், பாக்ஸைட், அரிதான மண் கனிமங்கள் (rare earth minerals).
தென்னாப்பிரிக்காவில் தங்கம், பிளாட்டினம், வைரம், நிலக்கரி, இரும்புத் தாது, குரோமியம்.
எகிப்தில் எண்ணெய், இயற்கை எரிவாயு.
எத்தியோப்பியாவில் தங்கம், பிளாட்டினம், டான்டலம், காபி.
ஈரானில் எண்ணெய், இயற்கை எரிவாயு.
சவுதி அரேபியாவில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புகளில் ஒன்று.
ஐக்கிய அரபு அமீரகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவை இருக்கின்றன.

இந்தியா எப்படி தப்பிப்பது?

இதை பகிர்ந்துக்கொள்வதன் மூலம் ஒவ்வொரு நாடுகளின் தேவையையும் பூர்த்தி செய்துக்கொள்ள முடியும். இதில் இந்தியா, சீனா, ரஷ்யா பல நாடுகள் சொந்த கரன்சியில் வர்த்தம் செய்து வருகின்றன. இதுதான் தற்போது அமெரிக்காவுக்கு கோபம்.

இருப்பினும் தற்போது அமெரிக்க வரியிலிருந்து தப்பிக்க, சொந்த கரன்சி வர்த்தகத்தை நம்மால் கைவிட முடியாது. இதனை அதிகரிப்பதன் மூலம் நம்முடைய கரன்சியை பலப்படுத்தி பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும். இப்படித்தான் அமெரிக்காவின் வரியிலிருந்து தப்பிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+