For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹுட்ஹுட் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் நிதி உதவியை பெற வங்கி கணக்கு துவக்கம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஹுட்ஹுட் புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திர மக்களுக்கு உதவ முன்வருவோர் பணம் அளிக்க தேவையான வங்கி கணக்கை ஆந்திர அரசு துவக்கியுள்ளது.

ஹுட்ஹுட் புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டு வெளியேறியவர்கள் சுமார் 5 லட்சம் பேர். இவர்களை பாதுகாப்பான இடங்களில் அரசு தங்க வைத்துள்ளது. இதனிடையே வீடு, உடமைகளை இழந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க பொதுமக்களின் உதவியை ஆந்திர அரசு கோருகிறது.

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>You can help us and donate for relief to SBI a/c: 33913634404. IFSC Code: SBIN0002724, Branch: SBI Treasury Branch, Gowliguda, Hyderabad.</p>— N Chandrababu Naidu (@ncbn) <a href="https://twitter.com/ncbn/status/521566111347650560">October 13, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

உதவும் எண்ணம் கொண்ட மக்களிடமிருந்து பணத்தை பெற ஆந்திர அரசு சிறப்பு வங்கி கணக்கை துவக்கியுள்ளது. இந்த வங்கி கணக்கு குறித்த விவரத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது டுவிட்டர் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் இதோ: SBI a/c: 33913634404. IFSC Code: SBIN0002724, Branch: SBI Treasury Branch, Gowliguda, Hyderabad.

மேற்கண்ட வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பினால் அதை அரசு மீட்பு பணிகளுக்கு செலவிட பயன்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை காசோலை மூலமாக பணம் அனுப்ப விரும்புவோர், Deputy Secretary, Revenue Department, L-Block, AP Secretariat, Hyderabad என்ற முகவரிக்கு தங்களது காசோலைகளை அனுப்புமாறும் சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.

English summary
Chandrababu Naidu asks people to contribute for the relief work in storm hitting Andhra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X