நான் மட்டும் பார்ப்பேன் என கூறி.. முதலிரவு டூ "அத்தனை" வீடியோவையும் பேஸ்புக்கில் போட்ட கணவன்! புகார்
போபால் : திருமணமான முதல் நாளிலிருந்து தனது மனைவி வீட்டுக்குள் கால் வைத்ததில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளையும் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட கணவன் முதல் இரவு உள்ளிட்ட அந்தரங்க நிகழ்வுகளையும் படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டதாக மனைவி ஒருவர் பரபரப்பு புகார் அளித்திருக்கிறார்.
சமூக வலைதளங்களின் ஆதிக்கம் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் அன்றாட நிகழ்வுகள் தொடங்கி அனைத்தையும் வீடியோவாக எடுத்து பேஸ்புக் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது பலரது வழக்கமாக உள்ளது.
காலையில் எழுவது தொடங்கி தூங்கச் செல்வது வரை பேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் ஸ்டேட்டஸ் வைக்காவிட்டால் பலருக்கு தூக்கமே வராது. மேலும் புகைப்படங்களை விட பலருக்கு வீடியோக்களை வெளியிடுவதில் தான் ஆர்வம் அதிகம்.

வீடியோ சைக்கோ
காமெடி நடனம் சமையல் என ஒவ்வொன்றையும் வீடியோ எடுத்து அதனை பேஸ்புக்கில் பதிவிட்டால் லைக் கிடைக்கும் என்பதற்காக பலர் விபரீத செயல்களிலும் ஈடுபடுவார்கள். அந்த வகையில் ஒரு சைக்கோ கணவன் தனக்கும் தனது மனைவிக்குமான அந்தரங்க நிகழ்வுகளை வீடியோ எடுத்ததோடு அதனை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு இருக்கிறார். மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் அருகே பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார் அந்த இளைஞர். தற்போது 27 வயதாகும் அவருக்கும் 25 வயதான இளம் பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்று இருக்கிறது.

திருமணம்
பன்னாட்டு நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்துடன் வேலை பார்க்கும் அந்த இளைஞருக்கு மோட்டார் சைக்கிள் நகை பணம் என வரதட்சணையாக பல லட்சம் ரூபாய் மதிப்புக்கு பெண் வீட்டார் சீர்வரிசை கொடுத்திருக்கிறார்கள் ஆனாலும் தனக்கு புல்லட் வாகனம் வாங்கி தரவில்லையே என கடுகடுப்பில் இருந்திருக்கிறார் மணமகன். தொடர்ந்து திருமணமான ஆறு மாதங்களிலேயே தனது சுய ரூபத்தை கொஞ்சம் கொஞ்சமாக காட்டத் தொடங்கி இருக்கிறார்.

வரதட்சணை கொடுமை
தனக்கு கார் வாங்கி தரவில்லை என்றால் பெரிய பிரச்சினையாகிவிடும் என மிரட்டியதோடு தொடர்ந்து இரவு நேரங்களில் மனைவிக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தொந்தரவு அளித்து வந்திருக்கிறார். மேலும் உரிய வரதட்சனை தரவில்லை என்றால் உன்னை விவாகரத்து செய்து விடுவேன் என மிரட்டி இருக்கிறார் ஒரு கட்டத்தில் கணவனின் செயல்பாடுகளால் வாழ்க்கையை வெறுத்து போனபின் தனது தாய் வீட்டுக்கு சென்று இருக்கிறார் இந்த நிலையில் தான் அந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

காவல் நிலையத்தில் புகார்
தனது கணவரின் வரதட்சணை கொடுமை குறித்து அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் திருமணம் ஆன நாளிலிருந்து தனது மனைவியுடன் தனிமையில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நிறைய எடுத்து வைத்துள்ளதாகவும் அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி இருக்கிறார். இந்த நிலையில்தான் தனது மனைவியுடன் தனிமையில் இருக்கும் வீடியோக்களை பேஸ்புக்கில் அந்த இளைஞர் வெளியிட்டு இருக்கிறார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் நண்பர்கள் இதுகுறித்து அவரிடம் தெரிவிக்கவே அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றிருக்கிறார்.

அந்தரங்க வீடியோ
மனைவியுடன் தனிமையில் இருந்த வீடியோக்களை கணவன் தனது பேஸ்புக் பக்கத்தில் தான் வெளியிட்டு இருக்கிறார். திருமண நாளில் இருந்தே தனக்கு வீடியோ எடுப்பதில் ஆர்வம் எனக் கூறிய அந்த கணவன் திருமண சடங்குகள் முதல் தான் வீட்டுக்குள் நுழைந்தது வரை சின்ன விஷயங்களை கூட வீடியோ எடுத்து வைத்திருக்கிறார். ஆனால் தான் தனிமையில் இருந்த வீடியோக்களை கூட எடுத்து வைத்திருப்பார் என எனக்கு தெரியாது. சில நேரங்களில் அந்தரங்க வீடியோக்கள் எடுக்கும்போது தான் எதிர்த்த நிலையில், இது நான் மட்டுமே பார்ப்பேன் என கூறியதாகவும் ஆனால் வரதட்சணைக்காக இப்படி செய்வார் என எதிர்பார்க்கவில்லை என புகார் அளித்திருக்கிறார் அந்த பெண். இதை அடுத்து கணவனை கைது செய்யும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது போலீஸ்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications