கணவனின் குமுறல்.. ஜட்ஜ் ஐயா, மனைவி கிட்ட வாழவே முடியல.. பெட்ரூமில் நுழைந்தாலே.. டைவர்ஸ் தந்துடுங்க
கான்பூர்: கணவன் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவானது, ஒட்டுமொத்த நீதிமன்றத்தையும் வியப்பில் ஆழ்த்திவிட்டது.. இது சம்பந்தமாக அலகாத்பாத் கோர்ட் என்ன தீர்ப்பு வழங்க போகிறது? என்ற ஆர்வத்தையும் இந்த வழக்கு ஏற்படுத்திவிட்டது.
4 நாட்களுக்கு முன்பு, சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஒரு வழக்கின் தீர்ப்பு வெளியாகியிருந்தது. அதாவது, அந்த தம்பதிக்கு கடந்த 2016-ல் திருமணம் நடந்துள்ளது. கணவருக்கு அளவுக்கு அதிகமான மதுப்பழக்கம் இருந்ததால், நாள்பட்ட நீரிழிவு, கல்லீரல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.. இதனால், தம்பதிகளுக்கான உறவில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

துன்புறுத்தல்: எனவே, கணவர் தன்னுடைய பாலியல் தேவையை பூர்த்தி செய்யாமல் இருப்பாகவும், இது குறித்து கேட்டாலே, தன்னை துன்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டு கூறி மனைவி சென்னையில் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்..
இறுதியில், இரு தரப்பிலும் விசாரித்த நீதிபதி, "திருமண வாழ்க்கையில் பாலியல் உறவு முக்கிய பங்கு வகிக்கிறது.. ஒரு துணை தனது துணையின் பாலியல் தேவையை பூர்த்தி செய்யும் பொறுப்புடையவர்.. துணைவியின் இந்த அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்யாதது, இல்லற வாழ்வில் மிகப்பெரிய கொடுமை.. எனவே, கணவர் அந்த பெண்ணுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பும் பலரது கவனத்தை பெற்று வருகிறது.
கணவன் - மனைவி: இப்போது அலகாபாத் கோர்ட்டில் ஒரு தீர்ப்பு தரப்பட்டு, இதுவும் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறது.. உத்தரபிரதேசத்தை சேர்ந்த அந்த நபருக்கு திருமணமாகிவிட்டது.. எனினும் 2வதாக இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்..
ஆனால், 2வது மனைவியிடமும் கணவருக்கு நிம்மதி கிடைக்கவில்லை.. தன்னுடைய தேவைகள் எதையுமே 2வது மனைவி பூர்த்தி செய்வதில்லை என்றும், அதனால் 2வது மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டு லக்னோ குடும்ப நீதிமன்றத்தை நாடினார் கணவர்.
ஹைகோர்ட்: ஆனால், கணவருக்கு சாதகமாக எந்த தீர்ப்பும் அங்கு கிடைக்கவில்லை.. அதனால், அலகாபாத் ஹைகோர்ட்டுக்கு சென்றார்.. அங்கு தாக்கல் செய்திருந்த மனுவில், "எனக்கு திருமணமாகி, முதல் நான்கைந்து மாதங்கள் சந்தோஷமாக இருந்தோம்.. அதுவரை என்னுடன் இணக்கமாக இருந்த மனைவி, அதற்கு பிறகு என்னை மிரட்ட ஆரம்பித்துவிட்டார்.. மன ரீதியாக துன்புறுத்த துவங்கினார்..
சொந்தக்காரர்கள், நண்பர்கள் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தினார்.. வீட்டிலிருக்கும் பொருட்களை எல்லாம் தூக்கி உடைக்கிறார். இதெல்லாம்கூட பரவாயில்லை, என்னை தனியறையில் தூங்க சொல்லி கட்டாயப்படுத்துகிறார்..
பெட்ரூம்: பெட்ரூமுக்குள் நான் நுழைந்தாலே, தற்கொலை செய்துகொள்வேன் என்றும், அதற்கு என்னுடைய குடும்பத்தினர் தான் காரணம் என்று எழுதி வைத்துவிடுவேன் என்றும் மிரட்டுகிறார். எப்படியாவது மனைவியிடமிருந்து விவாகரத்து தந்துவிடுங்கள்" என்று மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த அலகாபாத் ஹைகோர்ட் நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி, தம்பதி ஒன்றாக சேர்ந்திருப்பது என்பது திருமண உறவில் முக்கியமான ஒன்று.. ஆனால், மனைவி அதை மறுக்கிறார்.. இப்படி மறுப்பதென்பது மணவாழ்க்கைக்கு எதிரானது.. இதனால் கணவன் உடல் ரீதியாகவும், மன ரீதியாவும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது என்றார்.
முன்னதாக இந்த வழக்கு குறித்து, பிரதிவாதி (மனைவி) எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.. எனவே, வாதியின் வாதங்களை மறைமுகமாக அவர் ஒப்புக்கொண்டதாகவும் நீதிமன்றம் கருதிய நீதிமன்றம், ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மைகளுக்கு ஆதாரம் தேவையில்லை என்றும் கூறியது.. குற்றம் சாட்டப்பட்டவர், கணவரை கொடூரமாக நடத்தினார் என்பது அவரது முன்னாள் தரப்பு சாட்சியத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், விவாகரத்தை உடனடியாக வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications