சோனியா காந்தி விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.. மோடி
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சுகவீனம் காரணமாக தனது வாரணாசி பிரச்சாரப் பயணத்தை ரத்து செய்துள்ளார். இதையடுத்து டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தைத் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, சோனியா காந்தியின் நலன் குறித்து விசாரித்தார். அவர் விரைவில் குணமடையவும் தான் பிரார்த்திப்பதாகவும் அவர் கூறினார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளராக டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தொடங்கி விட்டது. தீவிரமாக திட்டமிட்டு பணியாற்றி வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் லோக்சபா தொகுதியான வாரணாசியில் காங்கிரஸ் கட்சியின் மெகா பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் சோனியா பங்கேற்று பிரசாரம் செய்யவும் கட்சியினர் திட்டமிட்டிருந்தனர். இதற்காக சோனியா நேற்று முன்தினம் வராணாசி வந்தார்.
நேற்று காலை வாரணாசியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார் சோனியா. பாபட்பூரில் இருந்து கார் மூலம் நகரின் பல பகுதிகளில் மக்களை சந்தித்தார். சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு அவர் ஊர்வலமாக சென்று தனது பிரச்சாரத்தை துவக்கினார். சோனியாவின் காருடன் சுமார் 10 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களில் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் அணிவகுத்து சென்றனர். முதலில் காரில் பயணம் செய்த சோனியா காந்தி, பின்னர் திறந்த வெளி ஜீப்பில் நின்று தொண்டர்களுக்கு கை அசைத்தவாறு மோடி அரசுக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினார்.
இந்நிலையில் சோனியா காந்தி பங்கேற்ற பேரணி திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது. சோனியா காந்திக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து காங்கிரஸ் பேரணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து உடனடியாக சோனியா டெல்லி திரும்பினார். இதனால் வாரணாசி பிரசார பொதுக்கூட்டத்தில் சோனியா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, உடனடியாக ஷீலா தீட்சித்தைத் தொடர்பு கொண்டு சோனியா உடல் நலம் குறித்து விசாரித்தார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக அவர் டிவிட்டரிலும் சோனியா காந்தி விரைவில் குணம் பெற பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications