For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அரசு பணிக்கு செல்கிறார் 'வதேரா'வை அம்பலப்படுத்திய அசோக் கெம்கா!

By Mathi
Google Oneindia Tamil News

IAS Officer Ashok Khemka, Who Took On Robert Vadra, Cleared For Central Posting: Sources
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நிலக் கொள்ளை விவகாரத்தை அம்லப்படுத்திய ஹரியானா ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா மத்திய அரசுப் பணிக்கு செல்கிறார்.

ஹரியானாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கெம்கா, அம்மாநிலத்தில் விவசாய நிலத்தை ராபர்ட் வதேரா குறைந்த நிலைக்கு வாங்கி டி.எல்.எப். நிறுவனத்துக்கு கூடுதல் விலைக்கு விற்று லாபம் பார்த்ததை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து அம்மாநில அரசால் பல்வேறு துறைகளுக்கு அடிக்கடி மாற்றப்பட்டார் கெம்கா. கடைசியாக ஆவணகாப்பக இயக்குநராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வதேராவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டார் என்று கெம்கா மீது வழக்கு தொடர்ந்தது அம்மாநில அரசு.

இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் தாம் மத்திய அரசுப் பணிக்கு செல்ல விரும்புவதாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். தற்போது மோடி அரசு இதை ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் கெம்கா மத்திய அரசுப் பணி ஒன்றில் நியமிக்கப்பட இருக்கிறார்.

English summary
IAS officer Ashok Khemka - who alleges that he was targeted for taking on Congress president Sonia Gandhi's son-in-law Robert Vadra - is headed to New Delhi on a central government posting, sources say.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X