“மறக்க முடியாத கம்பீர குரல் மறைந்தது”.. தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் சரளா மகேஸ்வரி காலமானார்!
சென்னை: தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி மிகவும் பிரபலமான சரளா மகேஸ்வரி இன்று காலமானார். செய்தி வாசிப்பாளர் மட்டுமின்றி எழுத்தாளர், கவிஞர் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் என பன்முகம் கொண்டவர் சரளா மகேஸ்வரி.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் படித்த டெல்லி பல்கலைக்கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார் சரளா மகேஸ்வரி. மேற்கு வங்கத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சரளா மகேஸ்வரி. இவர் சுமார் 16 புத்தகங்களை எழுதியுள்ளார். 71 வயதான இவர் இன்று டெல்லியில் காலமானார்.

இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு சகாப்தமாகத் திகழ்ந்த தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் சரளா மகேஸ்வரி (71) இன்று காலமானார். அவரது மறைவிற்கு தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
80 - 90-களில் தொலைக்காட்சியில் செய்தி என்றாலே நினைவுக்கு வரும் ஒருசில முகங்களில் சரளா மகேஸ்வரியின் முகம் பரிச்சயமானது. எவ்விதப் பதற்றமும் இல்லாத அவரது வாசிப்பு முறையும், தெளிவான உச்சரிப்பும் அவரை நாடு முழுவதும் பட்டிதொட்டியெங்கும் பிரபலம் ஆக்கின.
1976-ல் தொடங்கிய இவரது செய்தி வாசிப்புப் பயணம் 2005 வரை சுமார் 30 ஆண்டுகள் தூர்தர்ஷனுடன் நீடித்தது. கறுப்பு வெள்ளை தொலைக்காட்சி காலத்தில் தொடங்கி, வண்ணத் தொலைக்காட்சி காலம் வரை செய்தி வாசிப்பில் ஒரு சகாப்தமாக விளங்கியவர் சரளா மகேஸ்வரி.
1991-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட செய்தியை தேசத்திற்கே அறிவித்த கனத்த குரல் இவருடையதுதான். அன்னை தெரசாவின் இறுதிச் சடங்கு உள்ளிட்ட பல வரலாற்று நிகழ்வுகளைத் தனது கம்பீரமான குரலால் மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.
இவரது மறைவு செய்தித் துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி நிகம் போத் காட்டில் இன்று மாலை சரளா மகேஸ்வரின் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications