For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுஷ்மா, வசுந்தராவை நீக்காவிட்டால் மழைக்கால கூட்டத் தொடர் முடக்கப்படும்! காங்கிரஸ் எச்சரிக்கை!!

Google Oneindia Tamil News

டெல்லி : லலித் மோடி விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே ஆகியோரை நீக்காவிட்டால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை அமைதியாக நடத்த விடமாட்டோம் என நரேந்திர மோடி அரசுக்கு காங்கிரஸ் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது...

jairam ramesh

மத்திய அரசு தற்போது சிக்கியிருக்கும் இந்த விவகாரத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் எனில் ராஜஸ்தான் முதலமைச்சர் மற்றும் சுஷ்மா சுவராஜ் பதவி விலகுவதை தவிர வேறு வழியில்லை. அவ்வாறு பதவி விலகாமல் நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடரை அமைதியாக நடத்த விடமாட்டோம். முடக்குவோம்.

பிரதமர் நரேந்திர மோடி இருவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே லலித்மோடியின் நெருங்கிய உறவினர் என்பது நிரூபணமாகியுள்ளது.

அதேநேரம் பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரம் குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்று தப்பித்துக் கொள்ள சாத்தியம் இல்லை.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

English summary
Sushma Swaraj and Vasunthara raje Syndya Should be sacked, other wise monsoon sission will not go on Smoothly- Congress warns BJP Govt
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X