கள்ளக்காதலுக்காக கார் டிரைவரை வெட்டி, ஆசிட்டில் எரித்து.. அப்பப்பா.. டாக்டர் செய்த வேலையை பாருங்க
Recommended Video

போபால்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது கார் டிரைவரை கண்டந்துண்டமாக வெட்டி கொலை செய்துள்ளார் பிரபல டாக்டர்.
மத்திய பிரதேச மாநிலம் ஹொசாங்கபாத் பகுதியில் நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 56 வயதாகும் சுனில் மந்த்ரி என்பவர் அப்பகுதியில் பிரபல மூட்டு வலி சிகிச்சை நிபுணராகும்.
வீட்டிலேயே அவரது மனைவி, துணி தைக்கும் கடையை நடத்தி வந்தார். அவர் திடீரென மரணமடைந்த நிலையில், அந்த கடையை நடத்தும் பொறுப்பை, தனது கார் டிரைவர் விரேந்திர பச்சோரி (30) என்பவரின் மனைவிக்கு வழங்கினார் சுனில் மந்த்ரி.

வீட்டில் உல்லாசம்
இதன்பிறகு தினமும் வீட்டுக்கு வரும் பச்சோரி மனைவியிடம் நெருங்கி பழகி, பணம் கொடுத்து தனது ஆசை வலையில் வீழ்த்தினார் டாக்டர் சுனில். இருவரும் வீட்டுக்குள்ளேயே உல்லாசமாக இருந்தனர். இந்த விஷயம் பச்சோரிக்கு தெரியாமல் இருவரும் பார்த்துக்கொண்டனர்.

கள்ளக்காதல் மோதல்
இதனிடையே, தனது மனைவிக்கும், டாக்டருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக பச்சோரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக கணவன் மனைவி நடுவே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சுனில் கவனத்திற்கும் வந்துள்ளது.

பல்வலி சிகிச்சை
எனவே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கார் டிரைவர் பச்சோரியை கொலை செய்ய திட்டமிட்டார் சுனில். சம்பவத்தன்று, பச்சோரி தனக்கு பல்வலி இருப்பதாக கூறவே, அவருக்கு சிகிச்சையளிப்பது போல நாற்காலியில் அமர வைத்து, திடீரென கழுத்தையறுத்து கொன்றுள்ளார் சுனில்.

திராவகம் வீச்சு
இதன்பிறகு தனது வீட்டுக்குள் பல துண்டுகளாக பச்சோரி உடலை அறுத்துள்ளார். பிறகு, திராவகத்தை வீசி உடலை எரித்துள்ளார். இதனிடையே, டாக்டரின் வீட்டுக்குள் வினோத சத்தங்களும், புகைமூட்டமும் எழுவதை கவனித்த அக்கம் பக்கத்தினர், நைஸாக போலீசுக்கு போன் போட்டு தகவலை சொல்லிவிட்டனர். திடீரென வீட்டுக்குள் நுழைந்த போலீசார் சுனிலை கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
-
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக?












Click it and Unblock the Notifications