For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியின் பொருளாதாக் கொள்கைகள் 'சூப்பர்'... பில் கிளிண்டன் பாராட்டு

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதாரக் கொள்கைகள் கவரும் வகையில் உள்ளன என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் பாராட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவை நரேந்திர மோடி விரைவில் சந்திக்கவுள்ள நிலையில் பில் கிளிண்டன் இந்தியா வந்துள்ளார். வந்த இடத்தில் மோடியை அவர் வெகுவாகப் பாராட்டி பேட்டி கொடுத்துள்ளார்.

ஜெய்ப்பூர் வந்துள்ள கிளிண்டன், அங்கு என்டிடிவிக்கு இதுதொடர்பாக அளித்துள்ள பேட்டியிலிருந்து....

முதல்வராக என்னைக் கவர்ந்தவர் மோடி

முதல்வராக என்னைக் கவர்ந்தவர் மோடி

நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதே என்னைக் கவர்ந்தவர். அவரை நீண்ட நாட்களாகவே நான் கவனித்து வருகிறேன்.

பொருளாதாரக் கொள்கைகள் கவருகின்றன

பொருளாதாரக் கொள்கைகள் கவருகின்றன

மோடியின் பொருளாதாரக் கொள்கைகள் என்னைக் கவர்ந்துள்ளன. ஆரம்பத்திலிருந்தே இதில் அவர் தெளிவாக இருக்கிறார்.

விசா பிரச்சினை

விசா பிரச்சினை

2000 குஜராத் கலவரத்தின் பின்னர் மோடிக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்ட விவகாரம் தற்போது கடந்த காலமாகி விட்டது. இந்திய மக்கள் மோடியை வாக்களித்து தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஷெரீப்பை அழைத்தது நல்ல விஷயம்

ஷெரீப்பை அழைத்தது நல்ல விஷயம்

மோடி பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை அழைத்தது நல்ல விஷயம். அதை அமெரிக்கா பாராட்டுகிறது. இது இந்திய முஸ்லீம்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாகும். அனைவருக்கும் தான் தலைவன் என்பதை மோடி இதன் மூலம் காட்டியுள்ளார்.

குஜராத் கலவரம் கடந்த காலம்

குஜராத் கலவரம் கடந்த காலம்

குஜராத் கலவரம் கடந்த காலமாகி விட்டது. அதிலிருந்து வெளியே வர வேண்டும்.

மோடியை மக்கள் நம்புகிறார்கள்

மோடியை மக்கள் நம்புகிறார்கள்

மோடியால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள். அவரிடம் அந்தத் திறமை இருக்கிறது என்று மக்கள் நம்புகிறார்கள் என்றார் அவர்.

சொந்த மக்களைக் கொல்ல முயலும் ஹமாஸ்

சொந்த மக்களைக் கொல்ல முயலும் ஹமாஸ்

இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரம் குறித்து அவர் கூறுகையில், இஸ்ரேல் ராணுவத்தைத் தூண்டி விட்டு தனது சொந்த மக்களையே கொல்ல முயல்கிறது ஹமாஸ். இதுதான் அதன் திட்டம் போலத் தெரிகிறது என்றார் கிளிண்டன்.

English summary
As India prepares for PM Narendra Modi's first meeting with Barack Obama, endorsements today came in from the man who is still voted the most popular and admired living President in the United States.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X