'பில்டிங்'தான் உடைஞ்சு போச்சு.. 'பேஸ்மென்ட்' நல்லாதான் இருக்கு.. பாஜகவுக்கு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது என்னவோ உண்மைதான். ஆனால் அதன் வாக்கு வங்கி கிட்டத்தட்ட அப்படியேதான் உள்ளது.

ஆனால் உண்மையில் உருக்குலைந்து போனது காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கிதான்.

இந்தியாஸ்பெண்ட் இணையதளத்தின் புள்ளிவிவர வரைபடங்கள் இதைத் தெளிவாக காட்டுகின்றன.

16 வருடமாக

16 வருடமாக

கடந்த 16 வருடமாக இருந்து வரும் பாஜகவின் வாக்கு வங்கியில் ஓட்டை பெரிதாக விழவில்லை என்பது அந்தக் கட்சிக்கு ஆறுதலான விஷயம்தான்.

1993 முதல் 2015 வரை

1993 முதல் 2015 வரை

1993ம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு 49 இடங்கள் கிடைத்தன. 98 தேர்தலில் 15, 2003 தேர்தலில் 20, 2008 தேர்தலில் 23 2013 தேர்தலில் 31 இடங்கள் கிடைத்தன. தற்போது 3 இடங்களே கிடைத்தன.

32.2 சதவீத வாக்குகள்

32.2 சதவீத வாக்குகள்

இந்த முறை பாஜகவுக்கு 32.20 சதவீத வாக்குகள் கிடைத்தன. இது 1993ம் ஆண்டுக்குப் பிறகு கிடைத்த குறைந்த வாக்கு சதவீதம்தான். ஆனால் கடந்த 1998ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட இதையொட்டியே வாக்கு சதவீதத்தை அது மெயின்டெய்ன் செய்து வருகிறது.

15 வருடமாக எதிர்க்கட்சி

15 வருடமாக எதிர்க்கட்சி

1993ம் ஆண்டு தேர்தலில் 49 இடங்கள் பாஜகவுக்கு கிடைத்தது. 1998ம் ஆண்டு இது 15 ஆக குறைந்தது. அன்று முதல் 2013ம் ஆண்டு வரை எதிர்க்கட்சியாகவே நீடித்தது பாஜக. கடந்த 2013 தேர்தலில் அக்கட்சிக்கு 35 சதவீதம் அளவுக்கு வாக்குகள் கிடைத்தன. 31 இடங்களையும் அது வென்றது. இது 2008 தேர்தலில் 23 சீட்டுகளாக இருந்தன.

அந்தோ பரிதாபம் காங்கிரஸ்

அந்தோ பரிதாபம் காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்துவரை இது மிக மோசமான தோல்வியாகும். அதன் வாக்கு சதவீதம் 9.7 சதவீதமாக குறைந்து விட்டது. ஒரு சீட்டும் கிடைக்கவில்லை.

காங். பெற்ற சீட்கள்

காங். பெற்ற சீட்கள்

1998 தேர்தலில் பாஜகவை காங்கிரஸ் தோற்கடித்தது. 52 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது. இதன் மூலம் ஷீலா தீட்சித் முதல்வரானார். அடுத்து வந்த 2003 தேர்தலில் 47 தொகுதிகளையும், 2008 தேர்தலில் 43 சீட்களையும் காங்கிரஸ் வென்று தொடர்ந்து ஆட்சியில் நீடித்தது.

மோசமான தோல்வி

மோசமான தோல்வி

இப்படி 15 வருடமாக கோலோச்சி வந்த காங்கிரஸ் 2013 தேர்தலில் மிகவும் மோசமான தோல்வியைச் சந்தித்தது. ஆம் ஆத்மியின் எழுச்சிக்கு 2013ம் ஆண்டு முகவுரை எழுதியது. இப்போதைய தேர்தலில் காங்கிரஸுக்கு முடிவுரை எழுதி விட்டது ஆம் ஆத்மி.

கிங் மேக்கர்

கிங் மேக்கர்

2013 தேர்தலி்ல காங்கிரஸ் கட்சியின் தொகுதிகள் எண்ணிக்கை 81 சதவீத சரிவைச் சந்தித்தன. அதாவது 2008ல் 43 இடங்களை வைத்திருந்த அக்கட்சிக்கு இந்த முறை 8 மட்டுமே கிடைத்தது. எட்டு சீட் மட்டுமே வைத்திருந்தபோதிலும் கிங் மேக்கராக மாறியது காங்கிரஸ். ஆம் ஆத்மி ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்தது. கெஜ்ரிவால் முதல்வரானார்.

ஆம் ஆத்மியின் எழுச்சி

ஆம் ஆத்மியின் எழுச்சி

ஆம் ஆத்மி கட்சி கடந்த 2013 தேர்தலில் 29.5 சதவீத வாக்குகளுடன் 28 இடங்களில் வென்றது. இந்த முறை 54.3 சதவீத வாக்குகளுடன் 67 இடங்களைப் பிடித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+