ஹிமாச்சல பிரதேசம் இடைத் தேர்தலில் டெபாசிட்டை இழந்து தோற்ற பாஜக! தலைமை மீது திரும்பும் அதிருப்தி
சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில், இடைத்தேர்தல் நடந்த மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும், மண்டி லோக்சபா தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று அசத்தியது. பாஜக அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியுள்ளது.
ஆளும் கட்சியாக இருந்தபோதிலும், ஒரு சட்டசபை இடைத் தேர்தலில் பாஜக டெபாசிட்டை இழந்து படுதோல்வியடைந்துள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நவம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையிலான பாஜக அரசின் செயல்திறனுக்கான மதிப்பீடாக இந்த இடைத்தேர்தல்கள் பெரிதும் கருதப்பட்ட நிலையில் இப்படி ஒரு ரிசல்ட் வந்தது.

விவாதம் இல்லையே
அடுத்த ஆண்டு இறுதியில் ஹிமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன.இந்த நிலையில்தான், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில், இமாச்சலப் பிரதேச இடைத்தேர்தலில் கட்சியடைந்த, அதிர்ச்சித் தோல்வி குறித்து தீவிரமாக ஆலோசனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஹிமாச்சலத்தைச் சேர்ந்தவர்தான் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா. எனவே இந்த தேர்தல் தோல்வி குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மண்டி தொகுதி
சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு தருவதில், பாஜக தலைமை சரியான முடிவுகளை எடுக்கவில்லை என்ற முணுமுணுப்பு அங்குள்ள பாஜக நிர்வாகிகளுக்கு இருக்கிறது. மண்டி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் மனைவி பிரதீபா சென்று போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த ஜூலை மாதம் வீரபத்ர சிங் மரணமடைந்தார். எனவே இயல்பாக அவரது மனைவிக்கு மக்கள் ஆதரவு இருந்தது.

என்ன காரணம்
இன்னொரு பக்கம் உட்கட்சி பூசல் காரணமாக பாஜக வேட்பாளர் டெபாசிட் இழந்த சம்பவமும் நடைபெற்றது. உரியவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்காமல் போட்டியிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் இதுபோன்ற தோல்விகள் அங்கு பதிவாகியதாக பாஜக நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

பாஜக வேட்பாளர் டெபாசிட் இழப்பு
ஜுப்பல்-கோட்காயில், பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான நீலம் செராய்க், காங்கிரஸின் ரோஹித் தாக்கூரிடம் டெபாசிட்டை இழந்து தோற்றார். இரண்டாவது இடத்தைப் பிடித்தது, பாஜக கிளர்ச்சிக் கட்சித் தலைவர் சேத்தன் ப்ராக்டா. சேத்தன் ப்ரக்தா பாஜக எம்எல்ஏவான நரிந்தர் ப்ராக்தாவின் மகன் ஆவார், அவர் ஜூன் மாதம் இறந்ததால் இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்படியிருக்கும்போது, நீலம் செராய்க்கு டிக்கெட் கொடுத்தது பாஜக தலைமை.

குடும்ப அரசியல்
அர்கி மற்றும் ஃபதேபூர் ஆகிய தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. "குடும்ப அரசியல் குற்றச்சாட்டுகள் காரணமாக குடும்ப உறுப்பினர்களுக்கு டிக்கெட் வழங்க வேண்டாம் என்று பாஜக உயர்நிலைக் குழு உறுதியான முடிவை எடுத்துள்ளது. சேத்தன் ப்ராக்தாவுக்கு கட்சி டிக்கெட் மறுக்கப்பட்டதற்கு இதுவே காரணம்," என்று ஹிமாச்சல் பாஜக தலைவர் சுரேஷ் காஷ்யப் தெரிவித்துள்ளார். ஆனால் குடும்ப அரசியல் என்பதை விட மக்கள் அனுதாப ஓட்டுக்களை போடுவதற்கு முக்கியத்துவம் தருவார்கள் என்பதை பாஜக கவனிக்க தவறிவிட்டது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு
"பாஜக போட்டி வேட்பாளராக ஒருவர் களமிறங்கியதால் நாங்கள் ஜுப்பல்-கோட்காயை இழந்தோம். மண்டியில் ஒரு சதவீத ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம். மறைந்த வீரபத்ர சிங்கிற்கு அனுதாப ஓட்டு இருந்தன, மேலும் பணவீக்கமும் அங்கு ஒரு பிரச்சினையாக மாறியது. பணவீக்கத்தின் காரணமான பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாக்குப்பதிவு போக்கு பாதிக்கப்படுகிறது. மீதமுள்ள இரண்டு இடங்களான அர்கி மற்றும் ஃபதேபூர் ஏற்கனவே காங்கிரஸின் வசம் இருந்தன, அங்கேயும் நாங்கள் கணிசமான அளவு உட்கட்சி பூசலை எதிர்கொண்டோம்.இந்த இடைத்தேர்தலில் வேட்பாளர் தேர்வில் தவறான அளவுகோல்களைப் பின்பற்றியதாலும், மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் தவறான வேட்பாளர்களுக்கு டிக்கெட் விநியோகித்ததாலும் கட்சி தோல்வியடைந்தது. ஜுப்பல்-கோட்காய் தொகுதிக்கு சேத்தன் ப்ராக்தாவின் பெயர்தான் பாஜக மாநில தலைமையால் டிக் அடிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு மேலிடம் டிக்கெட் தரவில்லை, " என்று பெயர் தெரிவிக்க விரும்பாத அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

திடீரென மாறிய பாஜக தலைமை
"கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்பே அவருக்கு டிக்கெட் உறுதி செய்யப்பட்டு உடனடியாக பிரச்சாரத்தில் ஈடுபடும்படி கேட்டுக் கொள்ளப்பட்ட போதிலும் பாஜக மேலிடம் வேறு நபருக்கு டிக்கெட் கொடுத்து விட்டது. ஜுப்பல்-கோட்காயில், அனைத்து பாஜக தொண்டர்களும், பிரமுகர்கள் முதல் பூத் பொறுப்பாளர்கள் வரை, பிரக்தாவுக்காக பிரச்சாரம் செய்தனர். அவரும் அவரது தந்தை நரிந்தர் பிரக்தாவும் (முன்னாள் முதல்வர்) பிரேம் குமார் துமாலுக்கு நெருக்கமானவர்கள். இறுதியாக மிகவும் பலவீனமான வேட்பாளருக்கு சீட்டு ஒதுக்கப்பட்டது" என்று அமைச்சர் மேலும் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications