மோடி ஆட்சியில் "அமைச்சர்".. இப்போ காங்கிரஸில் தஞ்சம்.. ஆஹா குஜராத்தில் தேர்தல் களத்தில் ட்விஸ்ட்
காந்திநகர்: குஜராத்தில் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் மாநில அமைச்சராக பணியாற்றிய பாஜக மூத்த தலைவர் ஜெய்நாராயண் வியாஸ் இன்று காங்கிரஸில் இணைந்துள்ளார்.
அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே முன்னிலையில் ஜெய்நாராயண் வியாஸ் கட்சியில் இணைந்திருக்கிறார்.
மாநிலத்தில் இன்றும் இரண்டு நாட்களில் தேர்தல் தொடங்க உள்ள நிலையில் பாஜகவின் முக்கிய 'தலை' ஒன்று காங்கிரஸில் இணைந்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சித்பூர்
ஜெய்நாராயண் வியாஸ் கடந்த 32 ஆண்டுகளாக பாஜகவில் பணியாற்றி வருகிறார். பதான் மாவட்டத்தின் 'சித்பூர்' தொகுதியில் பாஜக சார்பில் இதுவரை இவர் 7 முறை போட்டியிட்டு இருக்கிறார். அதில் நான்கு முறை வெற்றி பெற்றிருக்கிறார். அதேபோல நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது 2007லிருந்து 2012ம் ஆண்டு வரை அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இவர் பொறுப்பு வகித்து வந்தார். ஆனால் அதன் பின்னர் நடைபெற்ற 2012 மற்றும் 2017ம் ஆண்டு தேர்தலில் தோல்வியை தழுவினார். இதனால் இம்முறை அவருக்கு மீண்டும் சித்பூர் தொகுதியை ஒதுக்க பாஜக தொடக்கம் முதலே ஆட்சேபனை தெரிவித்து வந்தது.

இணைவு
இந்நிலையில் பாஜக வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் அறிவிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த ஜெய்நாராயண் வியாஸ் இம்மாத தொடக்கத்தில் கட்சியிலிருந்து விலகினார். பின்னர் சில நாட்களில் காங்கிரஸ் கட்சி தலைவர்களை தொடர்ந்து சந்தித்து வந்தார். இதனால் அவர் காங்கிரஸில் இணையலாம் என்று பரவலாக பேசப்பட்டது. இதனையடுத்து இன்று அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது மகனுடன் கலந்துகொண்ட ஜெய்நாராயண் வியாஸ், மல்லிகர்ஜூன கார்கே மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

வாக்குகள்
கடந்த 2012 மற்றும் 2017ம் ஆண்டில் சித்பூர் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இந்த தொகுதியில் நான்கு முறை வென்ற என்னை மீண்டும் களம் இறக்காமல் பாஜக அரசியல் செய்வதாக ஜெய்நாராயண் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் அவர் காங்கிரஸில் இணைந்திருந்தாலும், அதற்கு முன்னரே சித்பூர் தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே அடுத்த முறைதான் ஜெய்நாராயணுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் இவர் சித்பூர் தொகுதியில் 71,008 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்திருந்தார். இது மொத்த வாக்குப்பதிவில் 42.03 சதவிகிதமாகும். அதேபோல 2012ம் ஆண்டு 61,694 வாக்குகள் பெற்று காங்கிரஸிடம் தோல்வியை தழுவினார்.

தேர்தல்
குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு வரும் 1ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாவது கட்டமாக மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு 5ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. சித்பூர் தொகுதி இரண்டாம் கட்டத்தில் வருவதால் 5ம் தேதி இங்கு தேர்தல் நடத்தப்படுகிறது. 182 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. ஜெய்நாராயண் வியாஸை கட்சியிலிருந்து கழற்றிவிட்டதன் மூலம் இந்த முறை எப்படியாவது சித்பூர் தொகுதியை கைப்பற்றி விட வேண்டும் என்று பாஜக முயன்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications