கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு காத்திருக்கிறது பிரமாண்ட வெற்றி.. சர்வே முடிவால் தலைவர்கள் குஷி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக ஆட்சி மலருவதற்கான வாய்ப்பு இருப்பதாக பாஜக கட்சி தங்களுக்குள் நடத்திக்கொண்ட சர்வேயில் தெரியவந்துள்ளது.

கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இதில் 113 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியை பிடிக்கும். எடியூரப்பா தலைமையில் கடந்த 2008ல் நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் பாஜக கர்நாடகாவில் முதல் முறையாக ஆட்சிக்கு வந்தது.

தென் இந்தியாவில் அக்கட்சி ஆட்சியை பிடித்த முதல் மாநிலம் கர்நாடகா. இந்த நிலையில் ஆட்சியின்போது நடைபெற்ற ஏகப்பட்ட குழப்பங்கள், ஊழல் குற்றச்சாட்டுகளால் 2013 பொதுத் தேர்தலில் வெறும் 40 இடங்களில்தான் பாஜக வென்றது. அப்போது கர்நாடக ஜனதா கட்சி என எடியூரப்பா தனிக்கட்சியும் நடத்தி வந்தார்.

பலமான கட்சி

பலமான கட்சி

பிறகு பாஜகவில் இணைந்து கொண்ட எடியூரப்பா தற்போது மாநில தலைவராக உள்ளார். அவரது தலைமையின் கீழ் பாஜக பழையபடி உத்வேகம் அடைந்துள்ளது. நாடு முழுக்க தற்போது பாஜக பலமான கட்சியாக மாறிவரும் சூழலில், கர்நாடகாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதா என்று அறிய பாஜக உள்ளுக்குள் ஒரு ரகசிய சர்வேக்கு ஏற்பாடு செய்துள்ளது.

பலே வெற்றி

பலே வெற்றி

இந்த சர்வேயில் கர்நாடகாவில் 150 முதல் 160 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்ற தகவல் அவர்களுக்கு கிடைத்துள்ளது. மோடி அலையே இதற்கு காரணம் என்றும் அந்த சர்வே சுட்டிக் காட்டுகிறதாம். காங்கிரசுக்கு 50 தொகுதிகளும், மதசார்பற்ற ஜனதாதளத்திற்கு 22 தொகுதிகளும் கிடைக்கலாம் என்கிறது அந்த சர்வே.

வெற்றி உறுதி

வெற்றி உறுதி

ஒருவேளை ஏதாவது குளறுபடிகள் ஏற்பட்டால்கூட, 129 தொகுதிகள் கேரண்டியாக பாஜகவுக்கு கிடைக்கும் என்று அடித்துச் சொல்கிறது அந்த சர்வே. பாஜக வட்டாரத்தை சேர்ந்த ஒரு மூத்த தலைவர் 'ஒன்இந்தியாவிடம்' இந்த சர்வே குறித்த தகவலை பகிர்ந்து கொண்டார்.

மூவர் கூட்டணி

மூவர் கூட்டணி

நாட்டின் பெரிய மாநிலங்களில் ஒன்று கர்நாடகா. ஏற்கனவே கைக்கு கிடைத்த அதிகார வாய்ப்பை இதற்கு முன்பு இருந்த தலைமை தவறவிட்டுவிட்டது. எனவே, 2018ல் கர்நாடகாவில் காவிக் கொடியை பறக்க விட்டே தீருவது என்பதில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா ஆகிய மூவரும் தீவிரமாக உள்ளனராம். இந்த மூவர் கூட்டணி வியூகத்தை சமாளிக்க காங்கிரசாலோ, ம.ஜ.தவாலோ இயலாது என்பதில் பாஜக நிர்வாகிகள் முழு நம்பிக்கையில் உள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
It is mission 150 for the BJP in Karnataka. On the India map the saffron colour is missing in Karnataka and the BJP which has won this state in the past will look to take it again.
Please Wait while comments are loading...