திருவனந்தபுரம் சாமியார் விவகாரத்தில் தினம் ஒரு திருப்பம்: பெண்ணை காணவில்லை என காதலர் புகார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பலாத்காரம் செய்ய முயன்றதால் சாமியாரின் மர்ம உறுப்பை வெட்டியதாக எழுந்த சர்ச்சையில் நாள்தோறும் புதுப் புது திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.

திருவனந்தபுரம் அருகே பேட்டையில் சார்ந்த 23 வயது கல்லூரி மாணவியின் தந்தை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கு பரிகாரம் செய்து நிவர்த்தி செய்வதாக கூறி, ஹரிசுவாமி என்ற சாமியார் 6 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் ஆகியுள்ளார்.

அவ்வப்போது இளம்பெண்ணின் வீட்டுக்கு வந்த சாமியார் . வீட்டில் பூஜை செய்துள்ளார். அவரது பூஜையால் கணவின் உடல் நிலை தேறுவதாக மாணவியின் அம்மா நம்பியுள்ளார்.

ஒருகட்டத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார் சாமியார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அம்மாவிடம் கூறியுள்ளார். ஆனால் அதை பெரிய விஷயமாக அவரது அம்மா எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் சாமியாரை தண்டிக்க முடிவு செய்ய பெண், பாதுகாப்புக்காக கத்தி வைத்துக்கொண்டார்.

பாலியல் சாமியாருக்கு சரியான பாடம்

பாலியல் சாமியாருக்கு சரியான பாடம்

கடந்த மே18ம் தேதி மாணவியின் வீட்டுக்கு பூஜைக்கு வந்த சாமியார், இரவில் ஒரு அறையில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்க ஆரம்பித்துள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மாணவி, சாமியாரின் ஆணுறுப்பை ஒட்ட வெட்டினார். சாமியாரின் அலறல் சத்த கேட்டு ஒடிவந்த அருகில் உள்ளவர்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த சாமியாரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பாலியல் சாமியாருக்கு சரியான பாடம்

பாலியல் சாமியாருக்கு சரியான பாடம்

கடந்த மே18ம் தேதி மாணவியின் வீட்டுக்கு பூஜைக்கு வந்த சாமியார், இரவில் ஒரு அறையில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்க ஆரம்பித்துள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மாணவி, சாமியாரின் ஆணுறுப்பை ஒட்ட வெட்டினார். சாமியாரின் அலறல் சத்த கேட்டு ஒடிவந்த அருகில் உள்ளவர்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த சாமியாரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

யார் வெட்டியது?

யார் வெட்டியது?

திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சாமியாருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை எதிர்த்து மாணவி செய்த துணிச்சலான செயல் பலரிடமும் பாராட்டு பெற்றது. ஆனால் சாமியார் தானே ஆணுப்பை அறுத்துக்கொண்டதாக கூறினார்.

நண்பர்களே வெட்டினர்

நண்பர்களே வெட்டினர்

தினம் தினம் ஒரு திருப்பத்தை சந்தித்த வரும் சாமியார் ஹரிசுவாமி விஷயத்தில், போலீசார் நடந்த சம்பவத்தை திரித்து கூறிவிட்டதாக பாதிக்கப்பட்ட மாணவி கூறியிருந்தார். மேலும் தனக்கு எந்த பாலியல் தொந்தரவும் தரப்படவில்லை என்றும் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டியது தனது நண்பர்கள் என்றும் மாணவி கூறியிருந்தார்.

மாணவி எங்கே?

மாணவி எங்கே?

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அந்தப் பெண்ணின் ஆண் நண்பர் ஐயப்பதாஸ் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது பதிலளிக்குமாறு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
As frequent dramatic developments on godman 'rape' case , the victim's boyfriend filed Hapious corpus at court.
Please Wait while comments are loading...